விளையாட்டு அபிவிருத்திக்கு மஹேலவுடன் கைகோர்க்கும் டயலொக் நிர்வாகி

478

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மூலம் நியமிக்கப்பட்டிருக்கின்றார். 

தேசிய விளையாட்டு பேரவைக்கு சங்கா, மஹேலவுக்கு அழைப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினர்களாக செயற்படுவதற்கு இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்ததாக முன்னர் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில், இன்று (20) விளையாட்டு அமைச்சில் நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வின் போதே மஹேல ஜயவர்த்தன தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

இதேநேரம், இலங்கை அணியின் மற்றுமொரு முன்னாள் அணித்தலைவரும், கிரிக்கெட் விதிமுறைகளை தீர்மானிக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் நிர்வாக தலைவருமான குமார் சங்கக்கார தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினர்களில் ஒருவராக பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை, இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனராக இருக்கும் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி சுப்புன் வீரசிங்கவும் இலங்கையின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினராக மஹேல ஜயவர்த்னவுடன் கைகோர்க்கின்றார். 

அரசியல் தலையீடு, ஊழல்கள் இன்றி விளையாட்டு இருக்க வேண்டும் – ஹரின்

அதேநேரம், இலங்கையின் புகழை சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்ற கார் ஓட்டப்பந்த வீரர் டிலந்த மாலகமுவ, நீச்சல் வீரர் ஜூலியன் போல்லிங், இலங்கை இராணுவப்படைத் தளபதி லுட்டினட் ஜெனரல் சவேந்திர டி சில்வா மற்றும் ஹேமாஸ் நிறுவன சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி வில்ஸன் ஆகியோரும் தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.  

மொத்தமாக 15 புதிய உறுப்பினர்களுடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய விளையாட்டுப் பேரவை இலங்கையின் விளளையாட்டுத்துறை அமைச்சருக்கு தீர்மானங்களை எடுப்பதற்கும், புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆலோசனை வழங்குகின்ற ஒரு அமைப்பாக இந்த பேரவை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

தேசிய விளையாட்டுப் பேரைவயின் உறுப்பினர்கள் 

  • மஹேல ஜயவர்தன (தலைவர்)
  • ஜூலியன் போலிங் – உறுப்பினர்
  • குமார் சங்கக்கார – உறுப்பினர்
  • கஸ்தூரி செல்லராஜா வில்ஸன் – உறுப்பினர்
  • சுபுன் வீரசிங்க – உறுப்பினர்
  • ரொஹன் பெர்னாந்து – உறுப்பினர்
  • ருவான் கேரகல – உறுப்பினர்
  • சஞ்சீவ விக்ரமநாயக்க – உறுப்பினர்
  • மேஜர் ஜெனரல் ராஜித அம்பேமொஹோட்டி – உறுப்பினர்
  • சஞ்சீவ விக்ரமநாயக்க – உறுப்பினர்
  • லியுட்டினட் ஜெனரல் சவீந்திர சில்வா – உறுப்பினர்
  • ரோவேன சமரசிங்க – உறுப்பினர்
  • யஸ்வந்த் முட்டேடுவேகம – உறுப்பினர்
  • A.J.S.S. எதிரிசூரிய – உறுப்பினர்
  • தியுமி அபேசிங்க – செயலாளர் 

>>மேலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்க<<