T-20 வருகையால் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி என்கிறார் முரளிதரன்

479

உலகம் பூராகவும் T-20 போட்டிகள் பிரபல்யமடைவதற்கு முன் பந்து வீசுவது இலகுவாக இருந்ததாவும், தற்போது அந்த நிலை முற்றிலும் மாற்றமடைந்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக அடித்தாடுகின்ற யுகமொன்று உருவாகியிருப்பதாகவும் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்துவீச்சு ஜாம்பவானும், சன்ரைசஸ் ஹைதரபாத் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளருமான முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

மாலிங்கவை மீண்டும் நிராகரித்த மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளரான …

இந்தியாவின் ரூபா என்ற பதிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”எங்களுடைய காலத்தில் பந்து வீசுவது மிகவும் இலகுவாக இருந்தது. ஆனால் தற்போது கிரிக்கெட் விளையாட்டு முற்றிலும் மாறிவிட்டது. அதிலும் நாம் விளையாடுகின்ற காலத்தில் அதிகளவு T-20 போட்டிகள் இருக்கவில்லை. நாம் அதிகளவு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தோம். இதனால் துடுப்பாட்ட வீரர்களுக்கு வேகமாக துடுப்பெடுத்தாடவும், அதிகளவு சிக்ஸர்களைப் பெற்றுக்கொள்ளவும் கடினமாக இருந்தது. எனினும், தற்போது அது முற்றிலும் மாற்றமடைந்து விட்டது என்றார்.

இந்நிலையில், 11ஆவது .பி.எல் தொடரின் 13 லீக் போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இதில் ஒரு போட்டியில் 13 சிக்ஸர்கள் வீதம் 175 சிக்ஸர்களை துடுப்பாட்ட வீரர்கள் பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாக உள்ளது.

சுமார் 140 வருட கால கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளவரும், இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றவருமாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன், கடந்த 2 வருடங்களாக சன்ரைசஸ் ஹைதரபாத் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும், பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

அதிலும் குறிப்பாக, 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற முரளிதரன், 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற .பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்ததுடன், இதுவரை 66 .பி.எல் போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில், இம்முறை .பி.எல் தொடரில் சன்ரைசஸ் ஹைதரபாத் அணி இதுவரை பங்குபற்றிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

”எமது அணி 2016ஆம் ஆண்டு .பி.எல் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருந்தது. சகலதுறையிலும் பிரகாசிக்கின்ற நட்சத்திர வீரர்களைக் கொண்ட அணியாக இம்முறைப் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடி 3 வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளோம். எனவே, எதிர்வரும் போட்டிகளிலும் இந்த வெற்றிப் பயணத்தை தொடருவதற்கு ஆவலாக இருக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

மேற்கிந்திய தீவுகள் – உலக பதினொருவர் இடையிலான T20 போட்டி மே மாதத்தில்

புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நட்சத்திர வீரர்கள் …

இதேவேளை, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வென்று தற்பொழுது 22 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அந்த வெற்றிக்கு காரணமாக இருந்த வீரர்களில் முரளியும் ஒருவர். இதுதொடர்பில் அவர் கூறுகையில்,

1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெற்றி கொண்டமை இலங்கை கிரிக்கெட்டில் மறுமலர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது எனத் தெரிவித்தார்.

உலக கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சு மூலம் துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்து வந்த முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராவும், டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் வீரராகவும் தனது ஆதிக்கத்தை இதுவரை காலமும் தக்கவைத்துக் கொண்டுள்ள முத்தையா முரளிதரன், தனது 46ஆவது பிறந்த தினத்தை நேற்றையதினம்(17) கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க