இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் T20I I தலைவர் சரித் அசலங்க IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிவந்த தென்னாபிரிக்காவின் ரெயான் ரிக்கில்டன், கோர்பின் போச் மற்றும் இங்கிலாந்தின் வில் ஜேக்ஸ் ஆகியோர் தேசிய அணிகளின் போட்டிகளுக்காக வெளியேறவுள்ளனர்.
RCB அணியில் இணையும் ஜிம்பாப்வே வேக நட்சத்திரம்
இவர்கள் லீக் போட்டிகளின் நிறைவில் IPL தொடரிலிருந்து வெளியேறுவதால் அவர்களுக்கு பதிலாக சரித் அசலங்க, இங்கிலாந்தின் ஜொனி பெயார்ஸ்டோவ் மற்றும் ரிச்சர்ட் கிலீசன் ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜொனி பெயார்ஸ்டோவ் IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளதுடன், சரித் அசலங்கவை முதன்முறைய IPL அணியொன்றுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















