வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 22

662
Muttiah Muralidaran,

2010ஆம் ஆண்டு – முரளி டெஸ்ட் கிரிக்கட்டில் ஓய்வு பெற்ற நாள்

இலங்கை மற்றும் உலக கிரிக்கட் வரலாற்றில் தோன்றிய மிகவும் அற்புதமான சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெற்ற நாளாகும். 1992ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது தனது டெஸ்ட் வாழ்வில் காலடி வைத்த முரளிதரன் 18 வருட காலமாக இலங்கை அணிக்கு 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 230 இனிங்ஸ்களில் பந்துவீசி 22.72 என்ற பந்துவீச்சு சராசரியில் 800 விக்கட்டுகளைக் கைப்பற்றி உலக டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றிலே அதிக விக்கட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது பிறகயின் ஓஜாவின் விக்கட்டைக் கைப்பற்றியதுதான் அவரது கடைசி மற்றும் 800ஆவது விக்கட் ஆகும். இனிங்ஸ் ஒன்றில் 4 விக்கட்டுகளை 47 தடவைகளும், 5 விக்கட்டுகளை 67 தடவைகளும் போட்டி ஒன்றில் 10 விக்கட்டுகளை 22 தடவைகளும் முரளிதரன் கைப்பற்றியுள்ளமை அவரது பந்துவீச்சு தந்திரத்துக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டாகும்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 21

1982ஆம் ஆண்டு – நுவான் குலசேகர பிறப்பு

இலங்கை அணி பெற்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான நுவான் குலசேகரவின் பிறந்த தினமாகும். துல்லியமாக இன்ஸ்சுவிங் பந்துகளை வீசி விக்கட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்ட வலதுகை வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகர இலங்கை அணிக்காக 2003ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலப்பகுதியில் 21 டெஸ்ட், 173 ஒருநாள் போட்டிகள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் கடந்த மாதம் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியிருந்தமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஜூலை மாதம் 22ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1863 அலெக் ஹெர்ன்  (இங்கிலாந்து)
  • 1892 ஜாக் மெக்பிரியன் (இங்கிலாந்து)mur
  • 1936 டஸ்டி ரோட்ஸ் (இங்கிலாந்து)
  • 1937 வசந்த் ரஞ்சனே (இந்தியா)
  • 1989 ட்ரெண்ட் போல்ட் (நியூசிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்