PSL சம்பியன் கிண்ணத்தை முதல்முறை வென்ற முல்தான் சுல்தான்ஸ்

Pakistan Super League - 2021

97
PSL Twitter

அபுதாபியில் நேற்று இரவு நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) இறுதிப்போட்டியில் பெஷாவர் சல்மி அணியை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் பாகிஸ்தான் சுப்பர் லீக் T20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. கொரோனா தொற்று தாக்கம் இருந்த நிலையில் இந்த வருடத்துக்கான போட்டிகள் பெப்ரவரிமார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது.

இரவு 11 மணிக்குத் தொடங்கும் PSL போட்டிகள்!

எனினும், உயிரியல் பாதுகாப்பு வலயம் தோல்வியடைந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தொடர் ஒத்திவைக்கப்பட்டது

அதன்பின் ஐக்கிய அரபு இராட்சியத்தில் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது. இதன்படி, கடந்த 9ஆம் திகதி முதல் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகள் அபுதாபியில் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் மொஹமட் ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ், வஹாப் ரியாஸ் தலைமையிலான பெஷாவர் சல்மி அணிகள் மோதின

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பெஷாவர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய முல்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களைக் குவித்தது.

அந்த அணி சர்பில் சொஹைப் மக்சூத் 35 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பௌண்டரிகள் உட்பட 60 ஓட்டங்களை எடுத்தார். அதிரடியாக ஆடிய றிள்ளி ரசோவ் 21 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பௌண்டரிகள் உட்பட 50 ஓட்டங்களை எடுத்தார்

பந்துவீச்சில் பெஷாவர் அணி சார்பில் சமீன் குல், மொஹமட் இம்ரான் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் வீழ்த்தினர்.

இதையடுத்து, 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெஷாவர் அணி களமிறங்கியதுஇதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பெஷhவர் அணியில் அதிகபட்சமாக சொஹைப் மலிக் 48 ஓட்டங்களையும், கம்ரான் அக்மல் 36 ஓட்டங்களையும், ரொவ்மன் பவெல் 23 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்துவீச்சில் முல்தான் அணி சார்பில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுக்களையும், இம்ரான் கான், பிளெசிங் முசராபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அமெரிக்க கிரிக்கெட் தொடரில் ஒன்பது இலங்கை வீரர்கள்

இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி முதல் முறையாக பாகிஸ்தான் சுப்பர் லீக் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது

மறுபுறத்தில் 2017இல் சம்பியன் பட்டம் வென்ற பெஷாவர் அணி, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது

முல்தான் சுல்தான்ஸ் அணியின் சொஹைப் மக்சூத் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றார்.

இதனிடையே, சம்பியன் பட்டம் வென்ற முல்தான் சுல்தானஸ் அணிக்கு பாகிஸ்தான் பணப்பெறுமதியில் 75 மில்லியன் ரூபாவும், தோல்வியைத் தழுவிய பெஷாவர் சல்மி அணிக்கு 30 மில்லியன் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…