அமெரிக்க கிரிக்கெட் தொடரில் ஒன்பது இலங்கை வீரர்கள்

74

அமெரிக்க கிரிக்கெட் வாரியம் (USA Cricket), தமது உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்திருக்கும் மைனர்  லீக் கிரிக்கெட் T20 தொடரில் விளையாடும் இலங்கை வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கை தொடர்: இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

அதன்படி, அமெரிக்காவின் நான்கு பிராந்தியங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்குபெறும் இந்த கிரிக்கெட் தொடரில் இலங்கையினைச் சேர்ந்த 09 வீரர்கள் பங்கேற்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு (2020) ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மைனர் லீக் கிரிக்கெட் தொடர் கொவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறவுள்ள இந்த தொடரில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஆறு வெவ்வேறு அணிகளை பிரதிநிதித்துவம் செய்யவிருக்கின்றமை  குறிப்பிடத்தக்கது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான செஹான் ஜயசூரிய மேற்கு பிராந்தியத்தின் சிலிகோன் வேல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக ஆடவிருக்கின்றார். 

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண நாயகன் அர்ஜூன ரணதுங்கவின் புதல்வரான தியான் ரணதுங்கவும் மேற்குப்பிராந்தியத்தின் மற்றுமொரு அணியான ஹொலிவூட் மாஸ்டர்ஸ் அணியினை விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார். இந்த அணியில் இலங்கையின் உள்ளூர் துடுப்பாட்டவீரரான செஹான் பெர்னாண்டோவும் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் அணிக்கான பரிசு என்ன?

இதேவேளை, கிழக்குப் பிராந்திய அணிகளில் ஒன்றாக இருக்கும் சமர்செட் கவாலியர்ஸ் அணிக்கு விளையாடுகின்ற சந்தர்ப்பத்தினை கனடாவினை கிரிக்கெட் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்த இலங்கையின் முன்வரிசை துடுப்பாட்டவீரர் ரவிந்து குணசேகர பெற்றிருக்கின்றார்.

அண்மையில் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற சுழல் பந்துவீச்சாளரான அமில அபொன்சோ, தென் பிராந்திய அணியான அட்லான்டா பையர் அணியினை பிரதிநிதித்துவம் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் தவிர இலங்கையினைச் சேர்ந்த ஏனைய கிரிக்கெட் வீரர்களான இசுரு குருவிட்டகே மற்றும் ரோய் சில்வா ஆகியோர் தென் பிராந்தியத்தின் ஏனைய அணியான FT. லோடர்டேல் லயன்ஸ் அணிக்காகவும் கயான் பெர்னாண்டோ மற்றும் பீட்டர் விட்டாச்சி ஆகியோர் சோக்கல் லேசிங்க் அணிக்காகவும் விளையாடுவதற்கு காத்திருக்கின்றனர்.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<