உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், அவுஸ்திரேலிய வீரர்கள் மற்றும் நடுவர்கள் என அனைவரும் கறுப்புப் பட்டி அணிந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியானது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடி வருகின்றது. இன்று ஆரம்பமான இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
அசத்தல் வெற்றியுடன் ஒருநாள் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை
குறித்த இந்த இறுதிப்போட்டியில் களமிறங்குவதற்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் உயிரிழந்தவர்களுக்காக இங்கிலாந்தின் தி ஓவல் மைதானத்தில் மௌன அஞ்சலியை செலுத்தினர்.
இந்திய அணி வீரர்கள் மௌன அஞ்சலியை செலுத்தியது மாத்திரமின்றி இன்றைய தினம் தங்களுடைய கைகளில் கறுப்புப் பட்டியை அணிந்து போட்டியில் விளையாடி வருகின்றனர். இவர்களுடன் நடுவர்கள் மற்றும் அவுஸ்திரேலிய அணி வீரர்களும் கறுப்புப்பட்டி அணிந்துள்ளனர்.
ஒடிசாவில் இரண்டு பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில் ஒன்றுடன் மோதியதில் பாரிய விபத்தொன்று கடந்த வெள்ளிக்கிழமை (02)பதிவாகியிருந்தது. குறித்த இந்த விபத்தில் 275 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 1000 இற்கும் மேற்பட்டோரட் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<