இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மிக்கி ஆர்த்தர்

96

தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் ஆகிய கிரிக்கெட் அணிகளின் முன்னாள் பயிற்சியாளரான மிக்கி ஆர்த்தர் இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை  பயிற்சியாளராக நியமிக்கப்படவிருக்கின்றார்.

அந்த வகையில், மிக்கி ஆர்த்தர் இந்த மாதம் 5 ஆம் திகதியில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணிக்கான தனது பயிற்றுவிப்புக் கடமைகளை ஆரம்பிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. மிக்கி ஆர்த்தரின் ஆளுகைக்குள் வரும் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இம்மாதம் 8 ஆம் திகதி அந்நாட்டிற்குப் பயணமாகின்றது. 

இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி நிபுணராக டில்சான் பொன்சேக்கா

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை……

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹதுருசிங்க குறித்த பதவியில் இருந்து இல்லாமல் சென்ற நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கம் இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ருமேஷ் ரத்நாயக்க கடமையாற்றி வந்தார்.

இவ்வாறான நிலையில், மிக்கி ஆர்த்தர் இலங்கை கிரிக்கெட் அணி பற்றி அறிந்து கொள்ள இலங்கை வீரர்களுடன் சிறிது காலம் இணைந்திருக்க வேண்டிய காரணத்தினால் ருமேஷ் ரத்நாயக்கவே பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் நிறைவுக்கு வரும் வரை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்காலிகமாக செயற்படவிருக்கின்றார். அதேவேளை பாகிஸ்தான் செல்லும் மிக்கி ஆர்த்தர் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் இலங்கை அணியின் ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றுவார்.   

மிக்கி ஆர்த்தர் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தென்னாபிரிக்காவின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டிருந்ததோடு பின்னர் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்திருந்தார். தொடர்ந்து, மிக்கி ஆர்த்தர் கடந்த மூன்று வருடங்களுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணிபுரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மிக்கி ஆர்த்தர் தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளை பயிற்றுவித்த காலகட்டத்தில் அவ்வணிகள் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் வைத்து சிறப்பான டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்திருந்தன.

இதேவேளை, மிக்கி ஆர்த்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் அவ்வணி முதல் தடவையாக ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றிருந்ததோடு T20 அணிகளின் தரவரிசையிலும் முதல் நிலை அணியாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்த்தர் மாறிய பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக கிரண்ட் ப்ளவர் செயற்படவுள்ளதோடு, டேவிட் சேக்கர் பந்துவீச்சு பயிற்சியாளராக கடமையாற்றவிருக்கின்றார். அதேநேரம், ஷேன் மெக்டோர்மட் இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணியேற்கவுள்ளார். 

IPL தொடருக்காக பதிவுசெய்துள்ள இலங்கையின் 39 வீரர்கள்!

இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர்……

எனினும், இந்த பயிற்சியாளர்களில் ப்ளவர், சேக்கர் ஆகியோர் பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணியுடன் செல்லவில்லை என ThePapare.com இற்கு அறியக்கிடைக்கின்றது.  

இவர்களில் இலங்கையின் களத்தடுப்பு பயிற்சியாளராக மாறவுள்ள ஷேன் மெக்டேர்மட் முன்னர் தெற்கு அவுஸ்திரேலிய பிராந்திய கிரிக்கெட் சபையுடன் இணைந்து பயிற்றுவிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த அனுபவத்தினை கொண்டிருக்கின்றார். 

இதேவேளை கிரான்ட் ப்ளவர் மிக்கி ஆர்த்தருடன் இணைந்து முன்னதாக பாகிஸ்தான் அணியுடன் கடமையாற்றியிருக்கின்றார். கிரான்ட் ப்ளவர் இலங்கை அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மாத்திரம் வேலை செய்யவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். டேவிட் சேக்கர் பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் ருமேஷ் ரத்னாயக்கவின் பொறுப்பினை எடுத்து இலங்கை கிரிக்கெட் அணிக்காக பந்துவீச்சு பயிற்சியாளராக சேவையாற்றவிருக்கின்றார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<