இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளன்று இந்திய அணி முதல் இன்னிங்சுக்காக 600 என்ற இமாலய ஓட்ட எண்ணிக்கையை நிர்ணயித்தது. இந்நிலையில், முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய இலங்கை அணி 154 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பாரிய நெருக்கடியில் உள்ளது.

ஏற்கனவே 399 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இரண்டாம் நாளாக இன்று துடுப்பாட்டதை தொடர்ந்த இந்திய அணி, மொத்த ஓட்ட எண்ணிக்கையை மேலும் 24 ஓட்டங்களால் உயர்த்தியிருந்த வேளையில், வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப்பின் நேர்த்தியான பந்து வீச்சில் செதேஷ்வர் புஜாரா 153 ஓட்டங்களுக்கு விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.  

அதனைத் தொடர்ந்து, 39 ஓட்டங்களுடன் இன்றைய தினம் துடுப்பாட்டத்தை தொடர்ந்த அஜிங்கயா ரஹானே தன்னுடைய 11வது அரைச் சதத்தினை பூர்த்தி செய்திருந்த நிலையில், லஹிரு குமாரவின் வேகப்பந்து வீச்சில் கடின பிடியொன்றினை பெற்றுக்கொடுத்ததன் காரணமாக 57 ஓட்டங்களுடன் களத்திலிருந்து வெளியேறினார். அதனையடுத்து 6வது விக்கெட்டுக்காக இணைந்துகொண்ட ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் விக்கெட் காப்பாளர் விரிதிமன் சஹா ஆகியோர் தங்களுக்கிடையில் 59 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். எனினும், குறித்த நேரத்தில் பந்து வீசியிருந்த அணித் தலைவர் ரங்கன ஹேரத், சஹாவின் விக்கெட்டினை 16 ஓட்டங்களுக்கு வீழ்த்தியதன் மூலம் இப்போட்டியில் தனது முதலாவது விக்கெட்டினை கைப்பற்றினார்.

ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலையில்

அதேவேளை அபார துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய அஷ்வின் அரைச் சதமொன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு 3 ஓட்டங்கள் எஞ்சியிருந்த நிலையில் (47 ஓட்டங்களுடன்) நுவான் பிரதீப்பின் பந்து வீச்சில் பிடியொன்றை வழங்கி ஆட்டமிழந்தார்.  

அந்த வகையில் மதிய போசன இடைவேளையின்போது இந்திய அணி 117 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 503 ஓட்டங்களை குவிந்திருந்தது. அத்துடன் கடந்த ஜனவரி மாதம் காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியிருந்த நுவான் பிரதீப் செதேஷ்வர் புஜாரா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றியதனூடாக முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய பதிவொன்றை நிலை நாட்டினார்.

அது போன்றே, இலங்கை அணி சார்பாக காலியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளராகவும் முத்திரை பதித்தார்.

மதிய போசன இடைவேளைக்குப் பின்னர் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி சற்று நேரத்துக்குள் ரவீந்திர ஜடேஜாவின் விக்கெட்டினை நுவான் பிரதீப்பின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டதன் மூலம் பறிகொடுத்தது.

எனினும், அதைத் தொடர்ந்து இணைந்த ஹர்டிக் பாண்டியா – மொஹமட் சாமி ஜோடி அதிரடியாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தது. 30 பந்துகளை எதிர்கொண்ட மொஹமட் சாமி மூன்று சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 30 ஓட்டங்களைப் பெற்று பங்களிப்புச் செய்தார்.  

அவரச சத்திரசிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ள அசேல குணரத்ன

பாண்டியா எட்டு ஓட்டங்களை பெற்றிருந்த போது, ரங்கன ஹேரத்தின் சுழல் பந்து வீச்சில் பெற்றுக்கொடுக்கப்பட்ட பிடியெடுப்பு வாய்ப்பு ஸ்லிப்பில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த திமுத் கருணாரத்னவினால் தவறவிடப்பட்டிருந்தது.  

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பாண்டியா வழமையான அதிரடி துடுப்பாட்ட பாணியை பின்பற்றி 49 பந்துகளுக்குள் 4 பௌண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உள்ளடங்கலாக தனது முதலாவது டெஸ்ட் அரைச் சதத்தினை பூர்த்தி செய்த நிலையில் ஆட்டமிழக்க இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.

அதேவேளை, இறுதி இரண்டு விக்கெட்டுகளில் இந்திய அணி 71 பந்துகளில் 83 ஓட்டங்களை பெற்று 600 ஓட்டங்களை எட்டியதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய நுவன் பிரதீப் 132 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 131 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அணித் தலைவர் ரங்கன ஹேரத் 159 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மட்டும் பதிவு செய்தார்.

அதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, முதலாவது விக்கெட்டினை (திமுத் கருனாரத்ன) வெறும் 7 ஓட்டங்களுக்கு உமேஷ் யாதவின் அதிரடிப் பந்து வீச்சில் இழந்து நெருக்கடியுடன் இன்னிங்ஸை ஆரம்பித்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க, உபுல் தரங்கவுடன் இணைந்து இரண்டாம் விக்கெட்டுக்கான 61 ஓட்டங்களை பதிவு செய்திருந்த நிலையில், தனுஷ்க குணதிலக்க, மொஹமட் சாமியின் அபார பந்து வீச்சில் ஷிகர் தவானிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய குசல் மெண்டிஸ், அதே ஓவரில் ஷிகர் தவானிடமே பிடி கொடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 68 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.

இந்நிலையில், களமிறங்கிய அஞ்செலோ மெதிவ்ஸ், உபுல் தரங்கவுடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக 57 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்தியிருந்த வேளை துரதிஷ்டவசமாக உபுல் தரங்க சிலி பொயிண்ட்டில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த அபினவ் முகந்தினால் ரன் அவுட் செய்யப்பட்டு 64 ஓட்டங்களுடன் வெளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்லவின் விக்கெட்டினை வெறும் 8 ஓட்டங்களுக்கு ரவிச்சந்திரன் அஷ்வின் வீழ்த்தி மேலும் நெருக்கடி அளித்தார்.

Photo Album – Sri Lanka vs India 2017 – 1st Test Day 2

எனினும் மிகவும் இக்கட்டான தருணத்திற்கு மத்தியிலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்னாள் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களுடன் களத்திலிருக்கின்றார்.

இந்திய அணி சார்பாக பந்து வீசிய மொஹமட் சாமி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியார் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர்

அந்த வகையில், இலங்கை அணி இரண்டாம் நாள் நிறைவின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 446 ஓட்டங்களால் பின்னிலையுற்று பாரிய நெருக்கடியில் உள்ளது.

இந்தப் போட்டியில் ஏற்கனவே அசேல குனரத்ன காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளமையினால், இலங்கை அணியின் 10 வீரர்களுக்கே துடுப்பாட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை போட்டியில் மூன்றாம் நாளாகும்.

SCORECARD  

[/vc_column_text]

India - BattingToss: India
Shikhar Dhawanc Mathews b Pradeep190 (168)
Abhinav Mukundc Dickwella b Pradeep12 (26)
Chesteshwar Pujarac Dickwella b Pradeep153 (265)
Virat Kohlic Dickwella b Pradeep3 (8)
Ajinkya Rahanec Karunarathne b Kumara57 (130)
Ravinchandran Ashwinc Dickwella b Pradeep47 (60)
Wriddhiman Sahac Perera b Herath16 (32)
Hardik Pandyac De Silva (Sub) b Kumara50 (49)
Ravindra Jadejab Pradeep15 (24)
Mohammed Shamic Tharanga b Kumara30 (30
Umesh YadavNot Out11 (10)
TotalExtras (16)600 (133.1 overs)
Sri Lanka - BowlingOMRW
Nuwan Pradeep3121326
Lahiru Kumara25.131313
Dilruwan Perera3011300
Rangana Herath4061591
Danushka Gunathilaka70430
Sri Lanka - BattingToss: India
Dimuth KarunarathneLBW b Yadav2 (9)
Upul TharangaRun Out 64 (93)
Danushka Gunathilakac Dhawan b Shami16 (37)
Kusal Mendisc Dhawan b Shami0 (4)
Angelo Mathewsc Kohli b Jadeja 83 (130)
Niroshan Dickwellac Mukund b Ashwin8 (15)
Dilruwan PereraNot Out92 (132)
Rangana Herathc Rahane b Jadeja9 (13)
Nuwan Pradeepb Pandya10 (26)
Lahiru Kumarab Jadeja2 (12)
Asela GunaratneDNB
TotalExtras (5)291 (78.3 overs)
India - BowlingOMRW
Mohammed Shami122452
Umesh Yadav141781
Ravichandran Ashwin275841
Ravindra Jadeja22.33673
Hardik Pandya30131
[/vc_column][/vc_row]