வர்த்தக டி-20 தொடரின் காலிறுதிக்கு எல்.பி பினான்ஸ், கொமர்ஷல் கிரடிட் அணிகள் தெரிவு

58

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்று வரும் வர்த்தக நிறுவனங்களின் பிரிவு ஏ அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று (30) நடைபெற்று முடிந்த காலிறுதிச் சுற்றுக்கு முன்னைய நொக் – அவுட் சுற்றில் ஷெஹான் ஜயசூரியவின் சகலதுறை ஆட்டத்தால் எல்.பி பினான்ஸ் அணியும், சதுரங்க டி சில்வாவின் சகலதுறை ஆட்டத்தால் கொமர்ஷல் கிரெடிட் அணியும் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.

பயிற்சிப் போட்டியில் அதிசிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி

கொழும்பு, MCA மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணியின் அனுபவமிக்க வீரரான ஷெஹான் ஜயசூரியவின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் எல்.பி பினான்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கான்ரிச் அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 18.2 ஒவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களுக்குச் சுருண்டது. அந்த அணிக்காக நிதானமாக துடுப்பெடுத்தாடிய பிரமோத் மதுஷான் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

எல்.பி பினான்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய இசுரு உதான 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஷெஹான் ஜயசூரிய 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் பதம்பார்த்தனர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய எல்.பி பினான்ஸ் அணி, ஷெஹான் ஜயசூரியவின் அதிரடி அரைச்சதத்தின் மூலம் 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை எட்டியது.

துடுப்பாட்டத்தில் ஷெஹான் ஜயசூரிய 51 ஓட்டங்களையும், லஹிரு உதார 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

கான்ரிச் பினான்ஸ் அணி 120/10 (18.2) – பிரமோத் மதுஷான்23*, இசுரு உதான 3/13, ஷெஹான் ஜயசூரிய 3/23

எல்.பி பினான்ஸ் அணி 121/4 (15.4) – ஷெஹான் ஜயசூரிய 51, லஹிரு உதார 32, லக்ஷhன் ரொட்ரிகோ 21

போட்டி முடிவு எல்.பி பினான்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி


ஹெய்லீஸ் அணி எதிர் கொமர்ஷல் கிரடிட் அணி

கொழும்பு, MCA மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது நொக்அவுட் போட்டியில் ஹெய்லீஸ் மற்றும் கொமர்ஷல் கிரடிட் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொமர்ஷல் கிரெடிட் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.  

அவிந்து தீக்ஷனவின் சுழலினால் சம்பியன் பட்டம் வென்ற மாஸ் சிலுவேட்டா

அதன்படி, களமிறங்கிய ஹெய்லீஸ் வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 139 ஓட்டங்களைக் குவித்தனர். ஹெய்லீஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக தினுக் விக்ரமநாயக்க ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தார்.

இதேநேரம், கொமர்ஷல் கிரெடிட் அணியின் பந்துவீச்சு சார்பாக சதுரங்க டி சில்வா 09 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 139 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொமர்ஷல் கிரெடிட் அணி 18.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

கொமர்ஷல் கிரெடிட் அணியின் துடுப்பாட்டம் சார்பாக சதுரங்க டி சில்வா 32 ஓட்டங்களையும், சாமர கபுகெதர 26 ஓட்டங்களையும் பெற மறுமுனையில் அலி கான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஹெய்லீஸ் அணி 139/9 (20) – தினுக் விக்ரமநாயக்க 71*, சதுரங்க டி சில்வா 4/09, அசித பெர்னாண்டோ 2/18

கொமர்ஷல் கிரெடிட் அணி 141/6 (18.3) – சதுரங்க டி சில்வா 32, சாமர கபுகெதர 26, டில்ஷான் முனவீர 23, சந்துன் வீரக்கொடி 22, அலி கான் 2/20

போட்டி முடிவு – கொமர்ஷல் கிரெடிட் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க