பங்களாதேஷ் – ஆப்கான் தொடரின் போட்டி அட்டவணை வெளியானது

Afghanistan tour of Bangladesh 2023

63

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை நடைபெறும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியானது இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜூன் மாத முதற்பகுதியில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இங்கிலாந்து குழாத்தில் இரு முக்கிய மாற்றங்கள்

குறித்த ஒருநாள் தொடரையடுத்து பங்களாதேஷ் சென்று ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.

இந்திய அணிக்கு எதிரான தொடர் நிறைவடைந்தவுடன் ஆப்கானிஸ்தான் அணியானது மீண்டும் பங்களாதேஷிற்கு பயணிக்கவுள்ளது.

பங்களாதேஷ் செல்லும் ஆப்கானிஸ்தான் அணியானது ஜூலை 5 முதல் 16ஆம் திகதிவரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 T20I போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஜூலை 5, 8 மற்றும் 11ஆம் திகதிகளில் செட்டகிரொமில் நடைபெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து சில்ஹெட்டுக்கு பயணித்து ஜூலை 14 மற்றும் 16ஆம் திகதிகளில் இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடரில் இரண்டு அணிகளும் விளையாடுகின்றன.

போட்டி அட்டவணை

  • ஜூன் 10-14 – டெஸ்ட் (டாக்கா)
  • ஜூலை 05 – முதல் ஒருநாள் (செட்டகிரொம்)
  • ஜூலை 08 – 2வது ஒருநாள் (செட்டகிரொம்)
  • ஜூலை 11 – 3வது ஒருநாள் (செட்டகிரொம்)
  • ஜூலை 14 – முதல் T20I (சில்ஹெட்)
  • ஜூலை 16 – 2வது T20I (சில்ஹெட்)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<