சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் பிரீமியர் நொக் அவுட் (விலகல் முறை) கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் நான்கு போட்டிகள் நடைபெற்று முடிந்தன.

சம்பத் வங்கி எதிர் டீஜேய் லங்கா

BRC மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டீஜேய் லங்கா அணி முதலில் துடுப்பாட்டத்தினை சம்பத் வங்கிக்கு வழங்கியிருந்தது.

பாகிஸ்தானுடனான T-20 தொடரில் இருந்து விலகும் உபுல் தரங்க

இந்த மாத இறுதியில் பாகிஸ்தானின்…

ஒரு இன்னிங்சுக்கு 42 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த சம்பத் வங்கி அணியில் ருமேஷ் புத்திக்க அரைச்சதம் கடந்திருந்தார்.  இவரின் இந்த துடுப்பாட்ட உதவியோடு சம்பத் வங்கியானது 42 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 242 ஓட்டங்களைக் குவித்துக்கொண்டது.

டீஜேய் லங்கா சார்பான பந்து வீச்சில் லக்ஷான் சந்தகன் மற்றும் கசுன் மதுசங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

தமக்கான வெற்றி இலக்கினை பெற பதிலுக்குத் துடுப்பாடிய டீஜேய் லங்கா அணி 18 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்தபோது போட்டி சீரற்ற காலநிலை காரணமாக தடைப்பட்டது. தொடர்ந்தும் இதே நிலை நீடித்த காரணத்தில் போட்டி கைவிடப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

சம்பத் வங்கி – 252/8 (42) ருமேஷ் புத்திக்க 70, அவிஷ்க பெர்னாந்து 26, அவிஷ்க பெர்னாந்து 26, தினுக் விக்கிரமநாயக்க 26, லக்ஷான் சந்தகன் 2/49, கசுன் மதுசங்க 2/17

டீஜேய் லங்கா – 102/2 (18) திசார கிம்ஹான 34*, கித்ருவான் விதானகே 34, ஹசந்த பெர்னாந்து 2/08

போட்டி முடிவு போட்டி கைவிடப்பட்டது. (டீஜேய் லங்கா அணி காலிறுதிப் போட்டிக்கு தெரிவு)


டிமோ நிறுவனம் எதிர் ஹட்டன் நஷனல் வங்கி

கொல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹட்டன் நஷனல் வங்கி அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை எதிரணிக்கு வழங்கினர்.

மழையின் காரணமாக இந்தப் போட்டியிலும் ஓவர்கள் குறைக்கப்பட்டிருந்தது. முதலில் துடுப்பாடிய டிமோ அணி 38 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களினை குவித்துக் கொண்டது.

டிமோ அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அஷான் தினிது 66 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். ஹட்டன் நஷனல் வங்கியின் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட புத்தி பெரேரா மற்றும் சஜீவ வீரக்கோன் ஆகிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றியிலக்கினை அடைய பதிலுக்கு ஆடிய ஹட்டன் நஷனல் வங்கி 19 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 103 ஓட்டங்களினை பெற்றிருந்த போது போட்டியில் மீண்டும் மழை குறுக்கிட போட்டி கைவிடப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

டிமோ நிறுவனம் – 188/8 (38) அஷான் தினிது 66, நிப்புன் கருணாநாயக்க 25, புத்தி பெரேரா 2/28, சஜீவ வீரக்கோன் 2/38

ஹட்டன் நஷனல் வங்கி – 103/5 (19) ரவிந்து நிர்மால் 35, சமீர சொய்ஸா 32, ப்ரமோத் ஹெட்டிவத்த 2/31

போட்டி முடிவு போட்டி கைவிடப்பட்டது (ஹட்டன் நஷனல் வங்கி காலிறுதிப் போட்டிக்கு தெரிவு)


ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் எதிர் கென்ரிச் பினான்ஸ்

மொரட்டுவ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியினை கைப்பற்றிய கென்ரிச் பினான்ஸ் அணியினர் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தை முதலில் துடுப்பாட பணித்தனர்.

முதலில் துடுப்பாடிய ஜோன் கீல்ஸ் அணி 36.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றுக் கொண்டது. ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் அணி சார்பாக திமுத் கருணாரத்ன அதிகபட்சமாக 36 ஓட்டங்களினை குவித்திருந்தார். அதேபோன்று பந்து வீச்சில் திறமையினை வெளிக்கொணர்ந்த முதுமுதலிகே புஷ்பகுமார வெறும் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

கொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தியது யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி

பதிலுக்கு வெற்றி இலக்கான 158 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற தமது துடுப்பாட்டத்தினை தொடங்கிய கென்ரிச் பினான்ஸ் அணி 33.3 ஓவர்களில் 4  விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது போட்டி மழையினால் தடைப்பட்டது. தொடர்ந்தும் இதே நிலை நீடித்ததால் கென்ரிச் பினான்ஸ் அணியினர் டக்வெத் லூயிஸ் முறையில் போட்டியில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

கென்ரிச் அணியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் விளாசியிருந்த ஒசாத பெர்னாந்து 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார். அதேபோன்று மதுக லியனபத்திரன ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் அணிக்காக மூன்று விக்கெட்டுக்களை சாய்தத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் – 157 (36.1) திமுத் கருணாரத்ன 36, பானுக்க ராஜபக்ஷ 31, முதுமுதலிகே புஷ்பகுமார  3/10, ரோஷன் அனுருத்த 2/16, கவிந்து குலசேகர 2/32

கென்ரிச் பினான்ஸ் – 153/4 (33.3) ஒசாத பெர்னாந்து 62*, கசுன் விதுர 24, பத்தும் நிசங்க 23, மதுக லியனபத்திரன 3/23

போட்டி முடிவு கென்ரிச் பினான்ஸ் அணி டக்வெத் லூயிஸ் முறைப்படி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தெரிவு


ஹேய்லிஸ் நிறுவனம் எதிர் எல்.பி பினான்ஸ்

MCA மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹேய்லிஸ் நிறுவன அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தது.

லாஹூர் T-20 அணிக்கான பரிந்துரை விளையாட்டு அமைச்சரால் நிராகரிப்பு

மழை காரணமாக இன்னிங்சுக்கு 28 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஹேய்லிஸ் அணி 26.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 114 ஓட்டங்களுடன் சுருண்டு கொண்டது. அபார பந்து வீச்சினை வெளிக்காட்டிய எல்.பி பினான்ஸ் அணியில் சரித் சுதாரக்க 4 விக்கெட்டுக்களையும் அஞ்செலோ பெரேரா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு ஆடிய எல்.பி பினான்ஸ் அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை குவித்திருந்த போது போட்டி மழையினால் தடைப்பட்டு கைவிடப்பட்டது. அதிரடியாக ஆடியிருந்த தேசிய அணி வீரர் இசுரு உதான எல்.பி பினான்ஸ் அணிக்காக 80 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஹேய்லிஸ் நிறுவனம் – 114 (26.2) லிசுல லக்ஷான் 26, சானக்க ருவன்சிரி 21, சரித் சுதாரக்க 4/39, அஞ்செலோ பெரேரா 3/20

எல்.பி பினான்ஸ் – 113/3 (14) இசுரு உதான 80

போட்டி முடிவு போட்டி கைவிடப்பட்டது. (எல்.பி பினான்ஸ் அணி காலிறுதிப் போட்டிக்கு தெரிவு)