தனது ஜெர்சி, துடுப்பு மட்டையை ஏலத்தில் விடும் அசார் அலி

86

கொவிட்-19 வைரஸிற்கு எதிராக உதவும் வகையில் தன்னுடைய 2017ம் ஆண்டுக்கான சம்பியன்ஷிப் தொடருக்கான ஜேர்சி மற்றும் முச்சதம் குவித்த துடுப்பாட்ட மட்டை என்பவற்றை ஏலம் விடுவதாக பாகிஸ்தான் வீரர் அசார் அலி தெரிவித்துள்ளார்.  

ஒன்பது விரல்களுடன் இந்தியாவுக்கு விளையாடிய பார்த்திவ் பட்டேல்

இந்திய அணியின் விக்கெட் காப்பாளர்களில் ஒருவராக இருந்த…………………

துடுப்பாட்ட மட்டை மற்றும் ஜேர்சி ஆகியவற்றை எதிர்வரும் 5ம் திகதிவரை ஏலத்தில் விற்பனை செய்வதற்கான காலம் வழங்கப்படும் என்பதுடன், இதற்கான ஆரம்ப விலையாக பாகிஸ்தான் ரூபாயில் 10 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் டெஸ்ட் அணித் தலைவர் அசார் அலி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதல் பகலிரவு டெஸ்ட் முச்சதத்தை பெற்றிருந்தார். அத்துடன், 2017ம் ஆண்டு பாகிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ணம் வெல்லும் போதும், அணியில் இருந்தார். இவரது ஜேர்சியில் குறித்த குழாத்திலிருந்த அனைவரும் கையொப்பம் இட்டுள்ள நிலையில், ஜேர்சியை விற்பனை செய்ய முடிவுசெய்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது உலகளாவிய ரீதியில் கொவிட்-19 காரணமாக இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தங்களுடைய நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக குறித்த துடுப்பாட்ட மட்டை மற்றும் ஜேர்சியை விற்பனை செய்யவுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். 

“நான் எனது மிகவும் நெருங்கிய தொடர்புடைய இரண்டு உடமைகளை கொவிட்-19 இற்காக ஏலத்தில் விட இருக்கிறேன். இவற்றுக்கு ஒரு மில்லியன் பாகிஸ்தான் ரூபாவினை ஆரம்ப தொகையாக அறிவித்துள்ளேன்” என்றார். 

இவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த பொருட்கள் இரண்டும் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான பொருட்கள். ஆனால், இவ்வாறான இன்னலான காலப்பகுதியில் இவை பயன்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என சுட்டிக்காட்டினார். 

கொவிட்-19 வைரஸிற்கு எதிராக பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய உதவிகளை வழங்கியவாறு உள்ளனர். இலங்கை வீரர்களும் நாட்டுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க