பானுக, அஷேனின் பிரகாசிப்பால் ஜோன் கீல்ஸ் அணிக்கு வெற்றி

129

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27 ஆவது சிங்கர் – MCA ப்ரீமியர் லீக் ஒருநாள் தொடரில் இன்று (5) நடைபெற்ற டிமோ அணிக்கு எதிரான போட்டியில் ஜோன் கீல்ஸ் அணி டக்வத் லூவிஸ் முறைப்படி13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டிமோ அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

MCA ப்ரீமியர் லீக்கின் லீக் சம்பியனானது எல்.பி.பினான்ஸ்!

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27ஆவது சிங்கர் – MCA ப்ரீமியர் லீக்…

இன்றைய போட்டியானது மைதானத்தின் ஈரத்தன்மை காரணமாக அணிக்கு தலா 39 ஓவர்களாக மட்டுப்படுத்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஜோன் கீல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 234 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஜோன் கீல்ஸ் அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பானுக ராஜபக்ஷ 66 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, அஷேன் சில்வா 58 ஓட்டங்களையும், ரொஷேன் சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். டிமோ அணியின் பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும், பசிந்து மதுஷான் மற்றும் சம்மு அஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Photos: JKH – A vs DIMO | 27th Singer-MCA Premier League 2020

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டிமோ அணி வெற்றி இலக்கை அடைய சிறந்த ஆரம்பத்தை பெற்ற போதும், இறுதிக்கட்டத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்து 34 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது, போட்டி நேரமின்மை காரணமாக நிறுத்தப்பட, 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வத் லூவிஸ் முறைப்படி ஜோன் கீல்ஸ் அணி வெற்றிபெற்றது.

டிமோ அணி சார்பில் அதிகபட்சமாக ரமேஷ் மெண்டிஸ் 49 ஓட்டங்களையும், மதீஷ பெரேரா 39 ஓட்டங்களையும், தீக்ஷில டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அஷேன் சில்வா மற்றும் சாமிக்க எதிரிசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

>>Photos: John Keells Holdings Cricket Team Preview 2020<<

போட்டி சுருக்கம்

ஜோன் கீல்ஸ் – 234/8 (39) – பானுக ராஜபக்ஷ 66, அஷேன் சில்வா 58, ரொஷேன் சில்வா 33, ரமேஷ் மெண்டிஸ் 3/49, சம்மு அஷான் 2/34, பசிந்து மதுஷான் 2/40

டிமோ – 195/8 (34) – ரமேஷ் மெண்டிஸ் 49, மதீஷ பெரேரா 39, தீக்ஷில டி சில்வா 31, அஷேன் சில்வா 2/26, சாமிக்க எதிரிசிங்க 2/44

முடிவு – ஜோன் கீல்ஸ் அணிக்கு டக்வத் லூவிஸ் முறைப்படி 13 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<