MCA பிரீமியர் லீக்கில் இலங்கை இளையோர் அணிக்கு முதல் வெற்றி

114
27th MCA Premier

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27ஆவது சிங்கர் – எம்.சி.ஏ பிரீமியர் (நொக் அவுட்) ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகள் இன்று (17) நடைபெற்றன. இந்தத் தொடரில் முதல்தடவையாக களமிறங்கியுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி, சிரேஷ்ட வீரர்களைக் கொண்ட டிமோ அணியுடனான போட்டியில் பந்துவீச்சில் மிரட்டி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

தனஞ்சய, ஷெஹான், கமிந்துவின் அபார ஆட்டத்துடன் ஆரம்பமாகிய MCA ப்ரீமியர் லீக்

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் 27 ஆவது தடவையாக ஏற்பாடு…

டிமோ எதிர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி

கொழும்பு எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி வீரர்களின் அபார பந்துவீச்சின் மூலம் டிமோ அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வென்றது. 

இந்தத் தொடரில் முதல்தடவையாக களமிறங்கியுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி பெற்றுக்கொண்ட முதல் வெற்றி இதுவாகும்.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய டிமோ அணியின் எந்த துடுப்பாட்ட வீரரும் பெரிய ஓட்டங்களை நோக்கி செல்லாத நிலையில், அந்த அணி 134 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. திக்ஷில டி சில்வா பெற்ற 27 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டமாகும். 

பந்துவீச்சில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் 18 வயதான வலதுகை சுழல் பந்துவீச்சாளரான அவிஷ்க லக்ஷான் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, டிலும் சுதீர, மதீஷ பத்திரன மற்றும் சமிந்து விக்ரமசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றினர். 

Photo Album – Hayleys Group vs Sampath Bank | 27th Singer-MCA Premier League 2020

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 29.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 137 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் சொனால் தினூஷ 43 ஓட்டங்களையும், தவீஷ அபிஷேக் 36 ஓட்டங்களையும் எடுத்தனர்.

சுருக்கம்

டிமோ – 134/10 (33.5) – திக்ஷில டி சில்வா 27, அவிஷ்க லக்ஷான் 4/22, டிலும் சுதீர 2/20, மதீஷ பதிரன 2/31, சமிந்து விக்ரமசிங்க 2/38

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி – 137/4 (29.5) – சொனால் தினூஷ 43, தவீஷ அபிஷேக் 36, சிஹான் கலிந்து 20, நிசல் தாரக்க 3/30

முடிவு – இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி


ஜோன் கீல்ஸ் எதிர் எல்.பி பினான்ஸ் 

கொழும்பு பி.ஆர்.சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பானுக ராஜபக்ஷ தலைமையிலான ஜோன் கீல்ஸ் அணியை குறைந்த ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய எல்.பி பினான்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஜோன் கீல்ஸ் அணிக்கு எல்.பி பினான்ஸ் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். 

Photo Album – DIMO vs SLSCA – U19 | 27th Singer-MCA Premier League 2020

குறிப்பாக பந்துவீச்சில் இலங்கை அணி வீரர்களான சரித் அசலங்க 3 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஜோன் கீல்ஸ் அணி 89 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எல்.பி பினான்ஸ் அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லக்ஷான் ரொட்ரிகோ மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 10.4 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. 

துடுப்பாட்டத்தில் லக்ஷான் ரொட்ரிகோ அரைச் சதம் கடந்து 52 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 32 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர். 

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் – 89/10 (30.2) – மினோத் பானுக 26, திமுத் கருணாரத்ன 20, சரித் அசலங்க 3/20, தனஞ்சய டி சில்வா 2/21, கவிக டில்ஷான் 2/22

எல்.பி பினான்ஸ் – 93/0 (10.4) – லக்ஷான் ரொட்ரிகோ 52*, சதீர சமரவிக்ரம 33*

முடிவு – எல்.பி பினான்ஸ் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி


ஹேலீஸ் பிஎல்சி எதிர் சம்பத் வங்கி

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ஹேலீஸ் அணி எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். 

சீரற்ற காலநிலையால் சமனிலையான மேஜர் எமர்ஜிங் போட்டிகள்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக…

இதனால் அந்த அணி 37.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை எடுத்தது. துடுப்பாட்டத்தில் லஹிரு திரிமான்ன 42 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டார். 

இந்நிலையில் போட்டியில் மழை குறுக்கிட சம்பத் வங்கி அணிக்கு கடைசியில் 34 ஓவர்களுக்கு 108 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. எனினும் அந்த அணி குறித்த ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களையே எடுத்து வெற்றயீட்டியது. 

போட்டியின் சுருக்கம்

ஹேலீஸ் பிஎல்சி – 137/10 (37.4) – லஹிரு திரிமான்ன 42, பினுர பெர்னாண்டோ 20, மலிந்த புஷ்பகுமார 3/24, தரிந்து கௌஷால் 2/16, விஷ்வ பெர்னாண்டோ 2/21

சம்பத் வங்கி – 122/6 (34) – நிசல் பிரான்சிஸ்கோ 21* பினுர பெர்னாண்டோ 2/21

முடிவு – சம்பத் வங்கி அணி டக்வர் லூவிஸ் முறைப்படி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<