ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு தொடரில் முதல் தோல்வி

82

2023ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் 9ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ரோயல் செலஞ்சர்ஸை 81 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு, தொடரில் தமது முதல் வெற்றியினையும் பதிவு செய்திருக்கின்றது. 

RCB அணியிலிருந்து வெளியேறும் 3ஆவது வீரர்

முன்னதாக தொடரில் தமது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் உடன் தோல்வியினைச் சந்தித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்தப் பருவத்தில் தமது முதல் வெற்றியை எதிர்பார்த்து நேற்று (06) கொல்கத்தாவில் வைத்து ரோயல் செலஞ்சர்ஸ் வீரர்களை எதிர்கொண்டிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று ரோயல் செலஞ்சர்ஸ் அணி தமது துடுப்பாட்டத்தினை தொடங்கிய பின்னர் சற்று தடுமாற்றம் காண்பித்ததோடு ஒரு கட்டத்தில் 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் அவ்வணிக்கு ரிங்கு சிங் மற்றும் சர்துல் தாக்கூர் ஆகிய இருவரது துடுப்பாட்டமும் கைகொடுக்க அவ்வணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 204 ஓட்டங்கள் எடுத்தது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் ரிங்கு சிங் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 2 பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் பெற்றார். அத்துடன் ரிங்கு சிங் – சர்துல் தாக்கூர் ஜோடி கொல்கத்தாவின் ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக 103 ஓட்டங்கள் எடுத்தது. மறுமுனையில் ரஹ்மானுல்லா குர்பாஸ் உம் அரைச்சதம் பெற்று 44 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் உடன் 57 ஓட்டங்கள் எடுத்தார்.

ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சில் டேவிட் வில்லி மற்றும் கர்ண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 205 ஓட்டங்களை பதிலுக்கு அடைய துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 17.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 123 ஓட்டங்களையே எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அதன் தலைவர் பெப் டூ பிளேசிஸ் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 12 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையும் ரெய்லி மெர்டித்

மறுமுனையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, சுயாஷ் சர்மா 3 விக்கெட்டுக்களையும், சுனில் நரைன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரரான சர்துல் தாக்கூர் தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – 204/7 (20) சர்துல் தாக்கூர் 68(29), ரஹ்மானுல்லா குர்பாஸ் 57(44), ரிங்கு சிங் 46(33), டேவிட் வில்லி 16/2(4)

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 123 (17.4) பெப் டூ பிளேசிஸ் 23(12), வருண் சக்கரவர்த்தி 15/4(3.4), சுயாஷ் சர்மா 30/3(4)

முடிவு – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 81 ஓட்டங்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<