இலங்கை – இங்கிலாந்து தொடரின் போட்டி மத்தியஸ்தருக்கு கொவிட்-19

Sri Lanka tour of England 2021

107
AFP/Getty Images

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20i கிரிக்கெட் தொடருக்கு போட்டி மத்தியஸ்தராக செயற்பட்ட பில் விட்டிகேஸிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று T20i போட்டிகளுக்கும், போட்டி மத்தியஸ்தராக பில் விட்டிகேஸ் செயற்பட்டிருந்தார். எனினும், தற்போது அறிகுறியற்ற கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர் 10 நாட்கள் தனிமைப்படத்தப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கவலைகொள்ளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

போட்டி மத்தியஸ்தருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டள்ள போதும், இதன் காரணமாக நாளை (29) நடைபெறவுள்ள முதல் ஒருநாள் போட்டிக்கு எந்த இடையூறுகளும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், போட்டி மத்தியஸ்தருடன் நெருங்கிய தொடர்புக்கொண்ட ஏனைய 7 போட்டி அதிகாரிகளும் எதிர்வரும் 7ம் திகதிவரை தனிமைப்படுத்தலில் வைக்கப்படவுள்ளனர். இதில், 2 போட்டி அதிகாரிகள் முதல் ஒருநாள் போட்டியில் கடமையாற்றவிருந்தனர்.

போட்டி அதிகாரிகள் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றாலும், இரண்டு அணியின் வீரர்களுக்கும் இதனால் எந்த பாதிப்பும் கிடையாது என இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரில் 3-0 என இலங்கை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்தநிலையில், ஐசிசி சுப்பர் லீக்கிற்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளைய தினம் (29) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…