இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு! ; யார் இந்த மார்வின் ஹெமில்டன்?

460

கட்டாரில் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணத்திற்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டியில் மக்காவு அணிக்கு எதிராக விளையாடவுள்ள 31 பேர்கொண்ட உத்தேச குழாத்தை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த குழாத்தில் இரசிகர்களுக்கு அறிமுகமில்லாத மார்வின் ஹெமில்டன் என்ற வீரரின் பெயர் இடம்பெற்றிருந்தது.    

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்காக இலங்கை அணி ஒருமாத திட்டம்

மகாவு அணிக்கு எதிரான பிஃபா உலகக் கிண்ணத்திற்கான ஆரம்ப கட்ட தகுதிகாண் போட்டிக்காக இலங்கை தேசிய

இதன்போது, குறித்த மார்வின் ஹெமில்டன் யார்? தகுதிகாண் போட்டிக்கான இலங்கை குழாத்தில் எவ்வாறு இடம்பிடித்தார்? என்ற கேள்விகள் அனைவர் மத்தியிலும் எழுந்திருந்தன. இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ThePapare.com இணையத்தளம் மார்வின் எமில்டனிடம் நேர்காணல் ஒன்றினை மேற்கொண்டிருந்தது.

யார் இந்த மார்வின் ஹெமில்டன்?

இங்கிலாந்தின் லீடன்ஸ்டொனை பிறப்பிடமாக கொண்ட மார்வின் ஹெமில்டன், அவரது தாயாரின் மூலமாக இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளார்.

“எனது தாயார் இலங்கையின் கொழும்பைச் சேர்ந்தவர். அவர் பெயர் குமாரி சில்வா. இங்கிலாந்தில் கல்வி கற்க வந்தவர். அதேபோன்று எனது தந்தையும் கல்வி கற்பதற்காக நைஜீரியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வருகைத்தந்தவர். அவர் பெயர் பெலிக்ஸ் ஹெமில்டன்” என மார்வின் ஹெமில்டன் எமக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது தன்னை அறிமுகம் செய்தார்.

ஆறு அடி உயரமான மத்தியக்கள வீரரான மார்வின் ஹெமில்டன் தற்போது இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் பொரோக் கழகத்துக்காக விளையாடி வருகின்றார்.

ஹெமில்டனின் கால்பந்தாட்ட வரலாறு

மார்வின் ஹெமில்டன் தனது தொழில்முறை கால்பந்தாட்ட ஆரம்பத்தை கில்லிங்ஹம் கழகத்தின் மூலமாக பெற்றதுடன், தெற்கு இங்கிலாந்தின் லீக் போட்டிகளில் விளையாடாத பல்வேறு கழகங்களுக்காக விளையாடியுள்ளார். அத்துடன் சைப்ரஸ், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்கான உத்தேச இலங்கைக் குழாம்

கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள AFC

அதேநேரம், அர்சனல் சிறியோர் அணிக்கான வீரர்கள் தேர்வில் இடம்பெற்றிருந்த இவர், 2005ம் ஆண்டு கில்லிங்ஹம் இளையோர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

“இங்கிலாந்தை பொருத்தவரை சிறிய வயதில் வீரர்கள் கால்பந்தாட்டம் விளையாட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், நான் 12 வயதில் கால்பந்து விளையாட ஆரம்பித்தேன். பின்னர், எனது பாடசாலை நண்பர் ஒருவர் ஊடாக ரிட்ஜ்வே ரோவர்ஸ் என்ற கழகத்துக்காக சில வருடங்கள் விளையாடினேன். இதற்கிடையில் அர்சனல் உட்பட சில கழகங்களின் இளையோர் அணிக்கான வீரர்கள் தேர்வுக்கும் சென்றிருந்தேன்.

தொடர்ந்து எனது 18வது வயதில் தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக கில்லிங்ஹம் கழகத்துடன் 2005ம் ஆண்டு இணைந்து 2008ம் ஆண்டுவரை குறித்த கழகத்தில் விளையாடினேன். இதன் பின்னர், APEP என்ற சைப்ரஸில் உள்ள கழகத்துக்காக ஒரு பருவகாலத்தில் விளையாடினேன். தொடர்ந்து இங்கிலாந்துக்கு வருகைத்தந்து, லீக் தொடர்களில் இல்லாத சில கழகங்களுடன் விளையாடினேன்.

குறித்த அணிகளில் விளையாடிய பின்னர் அவுஸ்திரேலியா சென்று விளையாடியதுடன், அமெரிக்கா சென்று சிறிய காலப்பகுதி விளையாடியிருந்தேன்”

ஹெமில்டன் 2010ம் ஆண்டு APEP என்ற சைப்ரஸில் உள்ள டிவிஷன் 1 கழகத்துக்காக 26 போட்டிகளில் விளையாடியதுடன், 5 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார். பின்னர், 2012-13 பருவகாலங்களில் ஈஸ்ட்போர்ன் பொரோக் கழகத்துக்காக 33 போட்டிகளில் விளையாடிய பின்னர், கடன் அடிப்படையில் (On loan) சில கழகங்களுக்காக விளையாடியுள்ளார்.  

அவுஸ்திரேலியா சென்று, பிரிஸ்பேன் ப்ரீமியர் லீக்கில் அல்பெனி க்ரீக் அணிக்காக விளையாடியதுடன், விக்டோரியா ப்ரீமியர் லீக்கில் சௌதென் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதன் பின்னர் இங்கிலாந்து திரும்பிய இவர், இஸ்த்மியான் லீக்கில் விளையாடியதுடன், இறுதியாக ஈஸ்ட்போர்ன் பொரோக் கழகத்துக்காக 2014-15 பருவாகலத்தில் 35 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இலங்கை அணியுடனான எதிர்கால இலட்சியங்கள்

ஹெமில்டன் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடுவது மாத்திரமின்றி கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளருக்கான தகுதியையும் மேம்படுத்தி வருகின்றார்.

இலங்கை கால்பந்து அணியின் உதவி பயிற்சியாளராக ஜானக்க சில்வா

இலங்கை தேசிய கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நேவி சீ ஹொக்ஸ் விளையாட்டுக்

“நான் UEFA வின் பயிற்றுவிப்பாளருக்கான B சான்றிதழை வைத்துள்ளேன். சைப்ரஸில் இருந்து வருகைத்தந்த பின்னர் பயிற்றுவிப்பினை கற்றுக்கொண்டு வருகின்றேன். அதிகமாக எனது பயிற்றுவிப்பினை எனது முதல் பயிற்றுவிப்பாளர் டென்னி பெய்லியின் மூலமாக கற்று வருகின்றேன். அவர் எனக்கு அதிகமாக உதவி செய்து வருகின்றார்”

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட போதே, இலங்கையின் கால்பந்தாட்டம் மீது ஹெமில்டனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

“நான் ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கை வருகைத்தந்த போது, இலங்கையின் கால்பந்தாட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.  நாம் குறித்த கால இடைவெளியில் அதிகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தோம். ஆனால், ஒருபோதும் நான் இலங்கை அணிக்காக விளையாடுவது குறித்து எதிர்பார்த்திருக்கவில்லை. தற்போது குறித்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்போது எனது எண்ணம் தேசிய அணிக்காக அதிகமான போட்டிகளில் விளையாடி, உலக நாடுகளுக்கு, இலங்கை அணியின் கால்பந்தட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான்” என்றார்.

மார்வின் ஹெமில்டன் தற்போது உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்காக கட்டார் சென்றுள்ள இலங்கை அணியுடன் இணைந்துள்ளார். மக்காவு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாராயின், இலங்கை தேசிய அணிக்கான அவரது முதலாவது சர்வதேசப் போட்டியாக குறித்த போட்டி அமையும் என்பது குறிப்பிடத்தகக்து.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க