மேற்கிந்திய தீவுகள் முன்னாள் நட்சத்திர வீரருக்கு ICC தடை

261

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான மார்லன் சாமுவேல்ஸிற்கு அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் சார்ந்த அனைத்து வகை செயற்பாடுகளிலும் ஈடுபட சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) தடை விதித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ICC இன் உறுப்புரிமை இரத்து தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை

மார்லோன் சாமுவேல்ஸ் இந்த ஆண்டின் ஒகஸ்ட் மாதம் அமீரக கிரிக்கெட் வாரியத்தின் (Emirates Cricket Board) ஊழல் தடுப்பு விதிகளை மீறி செயற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டே, தற்போது தடையினைப் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஊழல்சார் விடயத்திற்காக ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு ICC மூலம் குற்றம் சுமத்தப்பட்டிருந்த மார்லன் சாமுவேல்ஸ் தற்போது ஊழல் தடுப்பு விதிகளை நான்கு  பிரிவுகளில் மீறியதன் அடிப்படையிலேயே குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டு தடையினையும் பெற்றிருக்கின்றார்.

சாமுவேல்ஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானதாக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற T10 லீக் தொடரின் போது நடைபெற்ற ஊழல்சார் செயற்பாடு ஒன்றுக்கு அவர் ஊழல் தடுப்பு விசாரணைக் குழுவிற்கு  ஒத்துழையாமல் செயற்பட்டது காரணமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகள் அணியினை ஒருநாள் போட்டிகளில் தலைவராக வழிநடாத்தியிருக்கும் மார்லன் சாமுவேல்ஸ், கடந்த 2018ஆம் ஆண்டின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதிலும் ஆடாது போயிருந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருந்தார். அதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இரண்டு தசாப்தங்களாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய அவர் மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் 11,000 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<