ஐசிசியின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக மனு சவானி

162
Image Courtesy - Campaign India

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக சிங்கப்பூர் விளையாட்டு மையத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரியாகவும், ESPN ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் செயற்பட்டு வந்த மனு சவானி நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துடன் மோதும் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள..

சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியின் வெற்றிடத்துக்கு நால்வர் விண்ணப்பித்திருந்த நிலையில், லண்டனில் கடந்த வாரம் நடைபெற்ற நியமனக்குழுவின் கூட்டத்தின் போது இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட மனு சவானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மனு சவானி எதிர்வரும் பெப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையுடன் இணையவுள்ளார் என்பதுடன், இவர் உத்தியோகபூர்வமாக தனது பணியை எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளார் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது. ஐசிசியின் தற்போதைய தலைமை நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்டு வரும் டேவிட் ரிச்சட்சன், எதிர்வரும் உலகக் கிண்ணத்துடன், தனது பதிவியை இராஜினாமா செய்வதாக கடந்த வருடம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், ஐசிசி தலைவர் சஷங்க் மனோஹர் மற்றும் நியமனக்குழு குறித்த வெற்றிடத்துக்கான விண்ணப்பங்களை கோரியிருந்த நிலையில், மனு சவானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மனு சவானி இதற்கு முன்னர் ESPN ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 17 ஆண்டுகள் பணிபுரிந்ததுடன், குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

புதிய டெஸ்ட் வீரர்களின் தரப்படுத்தலில் பாக். தென்னாபிரிக்க வீரர்களுக்கு முன்னேற்றம்

நிறைவடைந்த தென்னாபிரிக்க பாகிஸ்தான் டெஸ்ட் தொடரின்..

இவர், இறுதியாக சிங்கப்பூர் விளையாட்டு மையத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்டுள்ளதுடன், கடந்த 2017ம் ஆண்டு அவர் குறித்த பதவியினை இராஜினாமா செய்திருந்தார். அத்துடன் இவர், மென்செஸ்டர் யுனைடட் விளையாட்டு லிமிட்டடின் கணக்கு தணிக்கை பிரிவிலும் பணிபுரிந்துள்ளார்.

மனு சவானியின் நியமனம் குறித்து கருத்து வெளியிட்ட ஐசிசி தலைவர் சஷங்க் மனோஹர்,

மனு சவானி ஐசிசியின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன். வணிகத்துறையில் அவருடைய 22 வருடகால அனுபவம் சர்வதேச கிரிக்கெட்டை மேலும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் என நினைக்கிறேன். சர்வதேச ரீதியில் மிக திறமையானவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். எனினும், மனு சவானி கிரிக்கெட் சபை உறுப்பினர்களுடன் இணைந்து, கிரிக்கெட்டை மேம்படுத்தி செல்ல அதீத திறமை உள்ளவர் என்பதால், அவரை இந்த பணிக்கு நியமித்தோம்.

அதேநேரம், மனு சவானி சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஒளிபரப்பு துறையின் தலைமைத்துவத்தை ஏற்று நடத்தியிருக்கிறார். மூலோபாயமான சிந்தனையுடைய இவர், கிரிக்கெட்டின் இயற்கை தன்மையை சிக்கல்களை நிவர்த்திசெய்து கட்டியெழுப்புவார் என நம்புகிறேன். அதேநேரம் ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்ட இவருடன், பணிபுரிவதற்கு காத்திருக்கிறோம்  என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<