லசித் மாலிங்க உலகக் கிண்ணத்தில் முக்கிய வீரராக அமைவார்: வாஸ்

109

அண்மைக்காலமாக ஐ.பி.எல். உள்ளடங்களாக உள்ளூர் போட்டிகளில் திறமையினை வெளிக்காட்டி வரும் லசித் மாலிங்கவின் அனுபவமும், அவரது தலைமைத்துவப் பண்புகளும் 2019ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக அமையும் என இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான சமிந்த வாஸ் குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும்..

இலங்கை கிரிக்கெட் அணி, உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் அடங்கிய தமது வீரர்கள் குழாத்தை கடந்த வாரம் அறிவித்திருந்தது. உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் சில வீரர்களின் உள்ளடக்கம், நீக்கம் என்பன ஆச்சரியம் தரும் விடயங்களாக அமைந்திருக்கும் நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் வீரர்கள் தெரிவு தொடர்பில் சரியாகவே நடந்திருப்பதாக சமிந்த வாஸ், நேற்று (23) மும்பையில் உள்ளூர் T20 தொடர் ஒன்றினை ஆரம்பிக்கும் நிகழ்வு ஒன்றின் போது பேசியிருந்தார்.

கடந்த சில மாதங்களாக இலங்கை அணி எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக செயற்பட்டிருக்கவில்லை. எனினும், நான் உலகக் கிண்ணத்திற்காக எமது தேர்வாளர்கள் தெரிவு செய்துள்ள அணி இணைப்பை கருத்திற்கொள்ளும் போது அவர்கள் நல்ல வேலை ஒன்றினையே செய்திருக்கின்றனர் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். ”

நாம் இங்கே இருந்து தான் எடுக்க வேண்டி உள்ளது, இப்போது வீரர்களுக்கு அவர்களை அவர்களே இனம்கண்டு நாட்டுக்காக விளையாட வேண்டி இருக்கின்றது. ” என சமிந்த வாஸ் கூறியிருந்தார்.

அதேநேரம், இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக 2017ஆம் ஆண்டில் கடமையாற்றிய வாஸ், லசித் மாலிங்கவினை அதிகம் பாராட்டியதோடு அவர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் எனவும் தெரிவித்திருந்தார்.

மாலிங்க உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் சந்தேகம் எதுவும் கிடையாது, அதோடு இலங்கையிலும் அவர் சிறந்தவராக உள்ளார். ”

நாம் அவரை ஒரு பந்துவீச்சாளராக தங்கியிருக்கின்றோம், அவர் அவரது தலைமைத்துவ ஆற்றலினையும் வெளிக்காட்டியிருந்தார். ”

1996ம் ஆண்டு உலகக் கிண்ண அரையிறுதியில் நடந்தது என்ன?

இலங்கை கிரிக்கெட் அணியையும், இலங்கையையும் உச்சத்திற்கு கொண்டு…

அணிக்கு அவர் தனது நூறு சதவீத பங்களிப்பினையும் வழங்கியிருந்தார். நாங்கள் அவரை ஒரு நாளில் மும்பை அணிக்காக (.பி.எல்) போட்டிகளில் ஆடுவதனையும், அடுத்த நாளில் இலங்கையில் (உள்ளூர் தொடரில்) விளையாடுவதனையும் பார்த்தோம். இது அவர் (கிரிக்கெட்டின் மீது) கொண்டுள்ள ஈடுபாட்டின் தன்மையினையும் தன் நாட்டின் மீதும், அணி மீதும் கொண்டுள்ள ஈடுபாட்டின் அளவினையும் காட்டுகின்றது. எனவே, வரப்போகின்ற உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் முக்கிய கதாபாத்திரத்தினை அவர் (மாலிங்க) எடுப்பார். ”

இலங்கை கிரிக்கெட் அணி, நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் கடைசியாக 2015ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய திமுத் கருணாரத்னவினால் வழிநடாத்தப்படவுள்ளது. திமுத் கருணாரத்ன கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அணி தலைவராக மாற்ற முயற்சி செய்த வீரர்களில் ஒருவராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வொட்சனின் அதிரடியால் சென்னைக்கு மீண்டும் முதலிடம்

ஐ.பி.எல். தொடரில் தங்களது சொந்த மைதானத்தில் தொடர் வெற்றிகளை குவித்து..

திமுத் கருணாரத்னவின் தலைமைத்துவம் பற்றியும் பேசிய வாஸ், இலங்கை அணியின் அணித்தலைவர் பொறுப்பு சற்று பிரச்சினையான விடயம் எனக் கூறிய போதிலும் கருணாரத்ன மீது தேர்வாளர்கள் நம்பிக்கை வைத்தே இப் பொறுப்பினை வழங்கியிருப்பதாக தெரிவித்தார். அதேநேரம் கருணாரத்னவினால் அணிக்குள் ஒற்றுமையினை கொண்டுவர முடியும் எனவும் வாஸ் குறிப்பிட்டார்.

நான் (எமது) அணி தங்களுக்குள் ஒத்துழைப்பாக இருந்து நடைபெறப்போகும் உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயற்படுவார்கள் என நம்புகின்றேன். ”

இலங்கை அணி உருவாக்கிய சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக உள்ள சமிந்த வாஸ் தான் ஓய்வு பெறும் போது, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 400 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 355 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணி, 2019ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளை எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி நியூசிலாந்து அணியுடன் கார்டிப் நகரில் ஆரம்பமாகும் போட்டியுடன் ஆரம்பம் செய்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<