NCC அணிக்காக இரட்டைச் சதமடித்து அசத்திய பெதும் நிஸ்ஸங்க

156

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரிமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரில் நான்காவது வாரத்துக்கான ஆறு போட்டிகள் இன்று (21) நடைபெற்றன.

என்.என்.சி மற்றும் இலங்கை இராணுவ அணிகளுக்கிடையில் நேற்று (20) ஆரம்பமாகிய போட்டியில் என்.சி.சி கழகத்துக்காக சதமடித்து அசத்திய இளம் வீரர் பெதும் நிஸ்ஸங்க, முதல்தரப் போட்டிகளில் இரட்டைச் சதமடித்து புதிய மைல்கல்லை எட்டினார்.

NCC கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த தேசிய அணி வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் சபையின்…

இதுஇவ்வாறிருக்க, இன்று (21) ஆரம்பமான போட்டிகளில் ஒசத பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் ரமேஷ் நிமன்த ஆகிய வீரர்கள் சதங்களுடன் பிரகாசிக்க, யசோதா லங்கா, தேஷான் டயஸ், பானுக ராஜபக்ஷ, டி.என் சம்பத், மஹேல உடவத்த, சுப்ரமணியன் ஆனந்த், லஷான் எதிரிசிங்க மற்றும் துஷதான் விமுக்தி ஆகியோர் அரைச்சதங்களுடன் திறமையினை வெளிப்படுத்தியிருந்தனர்.

NCC எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

என்.சி.சி கழகத்தின் சொந்த மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய என்.சி.சி கழகம், இளம் வீரர் பெதும் நிஸ்ஸங்கவின் இரட்டைச் சதம் மற்றும் சதுரங்க டி சில்வாவின் சதம் என்பவற்றின் உதவியுடன் தமது முதல் இன்னிங்ஸுக்காக 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 500 ஓட்டங்களப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

Photos: Ragama CC Vs. SLPA SC | Major League Tier A Tournament 2018/19

என்.சி.சி கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த 20 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரரான பெதும் நிஸ்ஸங்க இரட்டைச் சதம் கடந்து 206 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று முதல்தரப் போட்டிகளில் தனது கன்னி இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். அத்துடன், இந்த இரட்டைச் சதத்தைப் பெற்றுக்கொள்ள 247 பந்துகளுக்கு முகங்கொடுத்து 26 பவுண்டரிகளையும் அவர் விளாசியிருந்தமை சிறப்பம்சமாகும்.

இதேநேரம், என்.சி.சி கழகத்துக்காக சதுரங்க டி சில்வா (102) சதமடித்து கைகொடுக்க, தேசிய அணி வீரர்களான மஹேல உடவத்த, அஞ்சலோ பெரேரா மற்றும் உபுல் தரங்க ஆகியோர் அரைச்சதங்களைக் குவித்து அசத்தினர்.

பந்துவீச்சில் மல்க மதுஷங்க 116 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

அகில தனன்ஞயவின் போட்டித் தடையும், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலமும்

இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து…

இதனையடுத்து, தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இராணுவ கழக அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லக்ஷான் எதிரிசிங்க 84 ஓட்டங்களையும், துஷான் விமுக்தி 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

என்.சி.சி கழகம் (முதல் இன்னிங்ஸ்) 500/5 (96.2) – பெத்தும் நிஸ்ஸங்க 206*, சதுரங்க டி சில்வா 102, மஹேல உடவத்த 61*, அஞ்சலோ பெரேரா 59, உபுல் தரங்க 53, மல்க மதுஷங்க 2/116

இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 199/5 (78) – லக்ஷான் எதிரிசிங்க 84, துஷான் விமுக்தி 71, சதுரங்க டி சில்வா 2/17

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.


BRC எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

BRC கழகத்தின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பாடியது.

செரசன்ஸ் கழகம் சார்பாக தேஷான் டயஸ், பானுக ராஜபக்ஷ, டி.என் சம்பத், ருமேஷ் புத்திக ஆகியோர் அரைச்சதங்களுடன் வலுச்சேர்த்தனர். இதன்படி, போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் செரசன்ஸ் கழகம் தமது முதல் இன்னிங்ஸிற்காக 5 விக்கெட்டுக்களை இழந்து 358 ஓட்டங்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

BRC கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 358/5 (84) – தேஷான் டயஸ் 98, பானுக ராஜபக்ஷ 86, டி.என் சம்பத் 64, ருமேஷ் புத்திக 53*, லசித் லக்ஷான் 20, கமிந்து கனிஷ்க 2/66

Photos: SSC v Badureliya CC | Major League Tier A Tournament 2018/19

ThePapare.com | Hiran Werakkody | 21/12/2018 Editing and re-using images without permission of ThePapare.com…

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் SSC

SSC மைதானத்தில் தொடங்கியிருந்த இந்தப் போட்டியில், முதலில் துடுப்பாடிய பதுரெலிய கிரிக்கெட் கழக அணி, சுப்ரமணியன் ஆனந்த் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்ட 58 ஓட்டங்களுடன் முதல் நாள் நிறைவில் தமது முதல் இன்னிங்ஸுக்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களுடன் வலுவான நிலையை அடைந்தது.

Photos: SSC v Badureliya CC | Major League Tier A Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 227/6 (72) – சுப்ரமணியன் ஆனந்த் 58*, அலங்கார அசங்க 41, டடெண்டா தைபு 39, நதீர நாவல 26, கோசல குலசேகர 21, தெனுவன் ராஜகுமார 20*, தம்மிக பிரசாத் 2/30, சச்சித்ர சேனாநாயக்க 2/62


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான இந்தப் போட்டி கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது.

இப்போட்டியில் நீர்கொழும்பு அணியினால் துடுப்பாட பணிக்கப்பட்ட கோல்ட்ஸ் கழக அணி அவிஷ்க பெர்னாண்டோ பெற்றுக் கொண்ட சதத்தின் (101) உதவியுடன் முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்களைக் குவித்தது.

பந்துவீச்சில் உபுல் இந்திரசிறி 85 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நீர்கொழும்பு அணி, போட்டியின் முதல் நாள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 243/10 (69.4) – அவிஷ்க பெர்னாண்டோ 101, விஷாத் ரன்திக 40, குசல் ஜனித் 23, ஜெஹான் டெனியல் 23, உபுல் இந்திரசிறி 4/85, சந்தகென் பத்திரன 2/28, ரொஷேன் பெர்னாண்டோ 2/29

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 26/1 (8)


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டு கழகம்

சிலாபம் மேரியன்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய சிலாபம் மேரியன்ஸ் கழகம் முதல் நாள் ஆட்ட நிறைவில் முதல் இன்னிங்ஸுக்காக 289 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையை அடைந்தது.

Photos: Chilaw MCC v Moors SC – Major League Tier A Tournament 2018/19

சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஒசத பெர்னாண்டோ சதம் கடந்து 147 ஓட்டங்களையும், யசோதா லங்கா 54 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தனர்.

மறுமுனையில், சோனகர் அணிக்காக தரிந்து கௌஷால் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 289/6 (66) – ஒசத பெர்னாண்டோ 147, யசோதா லங்கா 54, தரிந்து கௌஷhல் 4/96

Photos: SSC v Badureliya CC | Major League Tier A Tournament 2018/19

ThePapare.com | Hiran Werakkody | 21/12/2018 Editing and re-using images without permission of ThePapare.com…

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

சோனகர் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியிருந்த இந்தப் போட்டியில், முதலில் துடுப்பாடிய துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழக அணி, ரமேஷ் நிமன்த பெற்றுக்கொண்ட சதத்தின் (120) உதவியுடன் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமது முதல் இன்னிங்ஸுக்காக 5 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களுடன் வலுவான நிலையை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகார சபை (முதல் இன்னிங்ஸ்) 268/5 (82) – ரமேஷ் நிமன்த 120, ப்ரிமோஷ் பெரேரா 24, அமில அபோன்சு 2/68, நிஷான் பீரிஸ் 2/86

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<