மெய்வல்லுனர், டென்னிஸ், பெட்மிண்டன் உலகில் 2019ஐ கலக்கியவர்கள்

90
 

21ஆம் நூற்றாண்டின் முதாலவது தசாப்தமானது முடிவடைந்து அதன் இரண்டாவது தசாப்தத்துக்கு காலடி வைத்துள்ள நிலையில், கடந்த வருடம் விளையாட்டு உலகில் பிரகாசித்த ஒருசில முக்கிய வீரர்களை இந்தக் கட்டுரை ஆராயவுள்ளது.  

இதன்படி, மெய்வல்லுனர், டென்னிஸ், பெட்மின்டன், போர்முயூலா ஒன் போன்ற முக்கிய விளையாட்டுக்களில் சாதித்த வீரர்கள் பற்றிய விபரங்களை இங்கு பார்ப்போம்.

ஜனவரி

 • வருடத்தின் முதலாவது கிரான்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் நடாலை வீழ்த்தி  சம்பியன் பட்டம் வென்றார். மகளிர் பிரிவில் ஜப்பானின் நயோமி ஒஸாகா சம்பியன் பட்டம் வென்றார்

 • பிரித்தானியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான அண்டி மர்ரே, அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடருடன் ஓய்வுப் பெற்றார்.

சர்வதேச கிரிக்கெட்டின் சாதனைகளும், சம்பவங்களும் – 2019 மீள் பார்வை

சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டு பல …………

பெப்ரவரி

 • செர்பியாவின் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் லோரஸ் உலகின் சிறந்த வீரர் விருதை 4ஆவது முறையாக வென்றார்

மார்ச்

 • 11 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் அமெரிக்காவின் நட்சத்திர கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தனது 5ஆவது மாஸ்டர்ஸ் சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
 • உலகின் நான்காம் நிலை டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரர், டுபாய் டென்னிஸ்  சம்பியன்ஷிப் தொடரில் சம்பியனானதன் தனது 100ஆவது தனிநபர் பட்டத்தைக் கைப்பற்றினார்.

 • மெய்வல்லுனர்களுக்கான புதிய உலக தரவரிசை முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்தது.

இலங்கைக் கிரிக்கெட்: 2019 ஒரு மீள்பார்வை

நாம் பிரியாவிடை கொடுத்த 2019 ஆம் ஆண்டு இலங்கை …………

ஏப்ரல்

 • உலகின் முன்னணி கோல்ப் வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் உட்ஸ், 11 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க கோல்ப் சம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார்

 • லண்டன் மரத்தன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் கென்யாவின் எலியுட் கிப்சோகே, பிரிஜிட் கோஸ்கெய் சம்பியன் பட்டம் வென்று அசத்தினர்

மே

 • உடலில் உள்ள டெஸ்டர்டோன் ஹார்மோன் அளவு தொடர்பாக பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் சம்பியன் தென்னாப்பிரிக்காவின் காஸ்டர் செமன்யாவின் முறையீட்டு மனுவை சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றம் நிராகரித்தது
 • இந்தியாவின் இளம் ஓட்டப்பந்தய வீராங்கனையான தூத்தி சந்த், மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்
 • அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட 18 வயதான மெத்யூ போலிங் என்ற மாணவன் போட்டியை 9.98 செக்கன்களில் கடந்து முழு உலகத்தின் கவனத்தையும் தன்பால் ஈரத்துக் கொண்டார்

 • இங்கிலாந்து டென்னிஸ் நட்சத்திரம் அண்டி மர்ரே அந்நாட்டின் உயரிய விருதான சேர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
 • ஒலிம்பிக் நீச்சலில் 15 வயதில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த லித்துவேனிய வீராங்கனை ரூடா மெய்லுடைட் தனது 22ஆவது வயதில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
 • பார்முலா – 1 கார்பந்தயத்தில் மூன்று முறை சம்பியன் பட்டத்தை வென்ற அவுஸ்திரியாவைச் சேர்ந்த நிகி லாதா நுரையீரல் நோய் காரணமாக தனது 70ஆவது வயதில் மரணம் அடைந்தார்.

ஜூன்

 • பாரிஸில் நடைபெற்ற பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம்மை வீழ்த்தி ஸ்பெய்னின் ரபேல் நடால் 12ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். அத்துடன், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸி. வீராங்கனை ஷ்லி பெர்டி 6-1, 6-3 என்ற நேர் செட்களில் மார்கெட்டாவை வீழ்த்தி முதன்முறையாக பட்டத்தைக் கைப்பற்றினார்.

 • பெட்மிண்டன் விளையாட்டில் உலகின் முன்னணி நட்சத்திர வீரராக திகழ்ந்த மலேசியாவின் லீ சாங், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 • 20 வயதுக்குட்பட்ட றக்பி உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவை ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சம்பியனாகத் தெரிவாகியது.

கால்பந்தை நேசித்து கிரிக்கெட்டில் ஜொலித்த அசித்த பெர்னாண்டோ

பாடசாலையின் இடைவெளி நேரங்களில் மாணவர்கள் ……………………

ஜூலை

 • லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சேர்பியாவின் நொவெக் ஜோகோவிச்சும், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும் சம்பியன்களாகத் தெரிவாகினர்
 • இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெற்ற 15ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் 11 தடவைகள் சம்பியனான அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி 5ஆவது முறையாகவும் சம்பியனாகியது

 • 106ஆவது பிரான்ஸ் சைக்கிளோட்டப் பந்தயத்தை கொலம்பியாவின் ஈகன் பெர்னல்ட் வெற்றி கொண்டார். இதன்மூலம் பிரான்ஸ் சைக்கிளோட்டத்தை வென்ற முதல் கொலம்பிய வீரராக இடம்பிடித்தார்

ஆகஸ்ட்

 • சுவிட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்ற உலக பெட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் பி.வி.சிந்து. 38 நிமிடங்களில் 21-7, 21-7 என்ற கணக்கில் நவோமி ஒஹராவை வென்றார்.

செப்டம்பர்

 • நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் இறுதிச் சுற்றில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி கனடாவின் பியான்கா முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்றார். அதே போல் ஆடவர் பிரிவில் நடால் 4ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார்.
 • இந்தியாவின் சிறந்த குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம் மற்றும் தென்கொரியாவின் நட்சத்திர கால்பந்து வீரரான சன் ஹியுங் மின் ஆகியோர் ஆசியாவின் அதிசிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

 • சீனாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கூடைப்பந்து தொடரில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்திய ஸ்பெயின் அணி, இரண்டாவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது.
 • ஒசாகாவில் நடைபெற்ற பான்பசிபிக் பகிரங்க டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் அனஸ்டாசியாவை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகா சொந்த மண்ணில் முதல்முறையாக பட்டத்தை வென்றார்.

அக்டோபர்

 • ரஷ்யாவின் உலன் உடே நகரில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று 8ஆவது பதக்கம் வென்ற ஓரே வீராங்கனை என்ற சாதனையை மேரி கோம் நிகழ்த்தினார்
 • 14 வயது சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 18 வயதுக்குட்பட்ட உலக சம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
 • அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 25-ஆவது பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

 • கட்டாரில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் போட்டியின் ஆடவர் 100 மீற்றர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மன் மற்றும் மகளிர் பிரிவில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி அன்பிரேசர் பிரைஸ் தங்கப் பதக்கங்களை வென்றனர்
 • உலக மெய்வல்லுனர் போட்டிகளில் கலப்பு அஞ்சலோட்டத்தில் தங்கம் வென்றதன் மூலம் ஜமைக்காவின் அதிவேக வீரர் உசைன் போல்ட்டின் 11 தங்கப் பதக்கங்கள் வென்ற சாதனையை அமெரிக்கா வீராங்கனை அலிஸன் பெலிக்ஸ் முறியடித்தார்
 • கட்டாரில் நடைபெற்ற உலக தடகள சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பஹ்ரைன் வீராங்கனை சல்வா ஈத் நாசர், முதல் ஆசிய வீராங்கனையாக தங்கப் பதக்கம் வென்றார்
 • நடப்பு ஒலிம்பிக் சம்பியனான கென்யாவைச் சேர்ந்த எலியுட் கிப்சோஜ் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்களுக்குள் ஓடி முடித்து உலக சாதனை படைத்தார்.  
 • உலக ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப்பில் பெண்ணொருவரால் வெல்லப்பட்ட பதக்கங்களின் சாதனையை தனது 25ஆவது தஙகப் பதக்க்கத்துடன் அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் முறியடித்துள்ளார்
 • சிக்காக்கோ மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு 16 வருடங்கள் பழமையான பெண்கள் மரதன் ஓட்ட சாதனையை கென்யாவின் பிறிஜிட் கொஸ்கெய் முறியடித்துள்ளார்.

தெற்காசியாவின் நீச்சல் நாயகன் மெத்தியூ அபேசிங்க

இலங்கையில் கிரிக்கெட்டுக்கு, கால்பந்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் ……………..

நவம்பர்

 • ஆறாவது தடவையாக போர்மியுலா வண் உலக சம்பியனாக, பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் முடிசூடிக் கொண்டார்.
 • ஜப்பானில் நடைபெற்ற 9ஆவது உலகக் கிண்ண ரக்பி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 32-12 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி உலக ரக்பி சம்பியன் பட்டத்தை 3ஆவது தடவையாக வென்றது.
 • பெடரேஷன் கிண்ண மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் அணி 16 வருடங்களுக்குப் பிறகு சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
 • லண்டனில் நடைபெற்ற தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் ஆறாம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ் சம்பியனானார்.

 • வருடத்தின் அதிசிறந்த ஆண் மெய்வல்லுனராக கென்யாவின் எலுய்ட் கிப்சாகேவும், அதிசிறந்த பெண் மெய்வல்லுனராக அமெரிக்காவின் டாலிலா முஹம்மத் ஆகியோர் தெரிவாகினர்
 • சவுதி அரேபியாவின் முதல் பெண் கார் பந்தய ஓட்டுனராக ரீமா ஜுபாலி அறிமுகமாகியுள்ளார்.
 • டென்னிஸ் உலகக் கிண்ணம் என்ற அழைக்கப்படுகின்ற டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் 6ஆவது தடவையாகவும் ஸ்பெய்ன் அணி சம்பியனாகத் தெரிவாகியது.
 • மோட்டார் ஜி.பி சைக்கிள் உலக சம்பியன் பட்டத்தை ஸ்பெய்னின் மார்க் மார்கெஸ் 6ஆவது தடவையாக வெற்றி கொண்டார்.

தெற்காசிய மெய்வல்லுனர் அரங்கை கலக்கிய தங்க மகள் டில்ஷி

நேபாளத்தில் அண்மையில் நிறைவுக்கு வந்த 13ஆவது தெற்காசிய விளையாட்டு ………..

டிசம்பர்

 • 2020 ஒலிம்பிக், 2022 பிபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுகளிலும் ஷ்யா பங்குகொள்வதற்கு 4 வருடத் தடையை உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் விதித்தது.

 • சீனாவில் நடைபெற்ற உலக பெட்மிண்டனில் உலக சம்பியனான ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டா சம்பியன் பட்டம் வென்று ஒரு பருவத்தில் அதிக பட்டங்கள் வென்றவர் என்ற மலேசியாவின் லீ சோங் வெய்யின் சாதனையை முறியடித்தார்.
 • சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் உலக சம்பியன் விருதுகள் ஆடவர் பிரிவில் ரபேல் நடாலுக்கும், மகளிர் பிரிவில் ஷ்லி பார்டிக்கு வழங்கப்பட்டன.
 • உலக அதிபார குத்துச்சண்டை சம்பியன் பட்டத்தை பிரித்தானியாவின் அன்தனி ஜோசுவா கைப்பற்றினார்

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<