மேஜர் லீக் சுப்பர் 8 சுற்றில் சதமடித்த கௌஷால், ஓசத, மஹேல மற்றும் தரங்க

160

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட மேஜர் ப்ரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது வாரத்துக்கான நான்கு போட்டிகள் இன்று (24) ஆரம்பமாகின.

இதில் SSC அணியின் கௌஷால் சில்வா, சிலாபம் மேரியன்ஸ் அணியின் ஓசத பெர்னாண்டோ, NCC அணியின் மஹேல உடவத்த மற்றும் தமிழ் யூனியன் கழகத்தின் தரங்க பரணவிதான ஆகியோர் சுப்பர் 8 சுற்றுக்கான முதல்நாள் ஆட்டங்களில் சதங்களைப் பெற்று பிரகாசித்திருந்தனர்.

Photos: Sri Lanka vs Australia 1st Test – Day 1

ThePapare.com | 24/01/2019 | Editing and re-using images without…..

SSC எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் கௌஷால் சில்வா சதம் கடந்து ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 197 ஓட்டங்களுடன் இராணுவ அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் SSC அணி வலுவான நிலையில் உள்ளது.

Photo Album  : SSC v Army SC | Major Super 8s Tournament 2018/19

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய SSC அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 363 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரர் கௌஷால் சில்வா 197 ஓட்டங்களையும், கவிந்து குலசேகர 82 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொள்ள, சதுன் வீரக்கொடி 52 ஓட்டங்களைப் பெற்றார். பிரமோத் மதுவன்த 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 363/2 (90) – கௌஷால் சில்வா 197*, கவிந்து குலசேகர 82*, சதுன் வீரக்கொடி 52, கிறிஷான் ஆரச்சிகே 23

ஆஸியின் வேகத்திற்கு முன் தனியாளாக போராடிய டிக்வெல்ல

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில்…….


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

ஓசத பெர்னாண்டோ பெற்ற சதத்தின் மூலம் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் சிலாபம் மேரின்ஸ் கிரிக்கெட் கழகம் ஸ்திரமான ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கொழும்பு, NCC மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் சிலாபம் மேரியன்ஸ் கழகம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 426 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இம்முறை ப்ரீமியர் லீக் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ள வலதுகை துடுப்பாட்ட வீரரான ஓசத பெர்னாண்டோ 109 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள, ஹர்ஷ குரே ஆட்டமிழக்காது 99 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், திக்ஷில டி சில்வா (79), யசோத லங்கா (75) ஆகியோர் அரைச்சதங்களைக் குவித்து வலுச்சேர்த்தனர்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 426/5 (90) – ஓசத பெர்னாண்டோ 109, ஹர்ஷ குரோ 99*, திக்ஷில டி சில்வா 79, யசோத லங்கா 75

இலங்கை குழாத்தில் நுவன் பிரதீப்புக்கு பதில் விஷ்வ பெர்னாண்டோ

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட…..


NCC எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் தனது முதல் இன்னிங்ஸுக்காகத் துடுப்பாடிய NCC அணி, மஹேல உடவத்த பெற்றுக்கொண்ட சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது.

சரசென்ஸ் அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளரான சாமிகர எதிரிசிங்க 82 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 253/10 (87.3) – மஹேல உடவத்த 101, சாரங்க ராஜகுரு 38, சாமிகர எதிரிசிங்க 4/82, மொஹமட் டில்ஷாட் 2/25

தரங்கவின் சதத்தோடு இலங்கை A அணிக்கு அபார வெற்றி

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி…….


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

தரங்க பரணவிதான ஆட்டமிழக்காமல் பெற்ற சதத்தின் மூலம் கொழும்பு கிரிக்கெட் கழக அணிக்கு எதிராக தமிழ் யூனியன் அணி ஸ்திரமான ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கட்டுநாயக்க மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 282 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

அனுபவ வீரர் தரங்க பரணவிதான 120 ஓட்டங்களையும், தமித சில்வா 71 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 282/6 (90) – தரங்க பரணவிதான 120*, தமித சில்வா 71*, சச்சித்ர சேரசிங்க 21

சகல போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<