முதல்தர ஒருநாள் தொடரில் நவோத், மலித் ஹெட்ரிக் சாதனை

Major Clubs Limited Over Tournament 2022

181

இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு Ace Cpaital, தமிழ் யூனியன், இராணுவம் மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகங்கள் தகுதிபெற்றன.

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான கழகங்களுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் நேற்று (24) நிறைவுக்கு வந்தன.

இதனிடையே நேற்றைய நாளுக்கான துடுப்பாட்டத்தினை நோக்கும் போது ராகம கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்ற 22 வயது இளம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரன நிஷான் மதுஷ்க சதம் (108) விளாசியிருந்தார். List A போட்டிகளில் அவரது 2ஆவது சதம் இதுவாகும்.

அதேநேரம், க்ரிஷான் சன்ஜுலவின் சதம் மற்றும் டெலோன் பீரிஸின் 5 விக்கெட் குவியலுடன் உதவியுடன் ராகம கிரக்கெட் கழகம் கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக (119 ஓட்டங்களால்) வெற்றியினையும் பதிவு செய்திருந்தது.

இதுதவிர இராணுவ கிரிக்கெட் கழகத்தின் சீக்குகே பிரசன்ன, நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் அரைச்சதம் (61) விளாசி அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

பந்துவீச்சினை நோக்கும் போது ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகத்துடனான போட்டியில் தழிழ் யூனியன் கழகத்தின் நவோத் பரணவிதானவும், களுத்துறை நகர கழகத்துடனான போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் மலித் டி சில்வாவும் ஹெட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியிருந்தனர்.

இதில் நவோத் பரணவிதான 8 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், மலித் டி சில்வா 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் எடுத்து List A போட்டிகளில் தமது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவு செய்தனர்.

மேலும், பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடனான போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் அகில தனன்ஜயவும், கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் ராகம கிரிக்கெட் கழகத்தின் டெலோன் பீரிஸும் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தனர்.

இதேவேளை, கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வந்த பிரதான கழகங்களுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் சுற்றில் முடிவில் குழு A இல் முதலிடத்தை தமிழ் யூனியன் கழகமும், 2ஆவது இடத்தை Ace Capital கழகமும் பெற்றுக் கொண்டன.

மறுபுறத்தில் குழு B இல் முதலிரெண்டு இடங்களையும் முறையே இராணுவ கிரிக்கெட் கழகமும், கொழும்பு கிரிக்கெட் கழகமும் பெற்றுக்கொண்டன.

இதன்படி, எதிர்வரும் ஜுலை 30ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் இராணுவ கிரிக்கெட் கழகம் மற்றும் Ace Capital கழகமும், 2ஆவது அரை இறுதிப் போட்டியில் தமிழ் யூனியன் கழகம் மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகமும் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ராகமகிரிக்கெட்கழகம்எதிர்கண்டிசுங்கவிளையாட்டுக்கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் 216 (44) நிஷான் மதுஷ்க 108, ஜனித் லியனகே 27, இஷான் ஜயரத்ன 22, பசன் பெத்தாங்கொட 3/42, ஆயேஷ் ஹர்ஷன 2/48, அருள் பிரகாசம் 2/51

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் 97 (30.4) அகீல் இன்ஹாம் 32, சலிந்து பத்திரன 22, டெலோன் பீரிஸ் 5/13, ஷசிக துல்ஷான் 2/28

முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 119 ஓட்டங்களால் வெற்றி

நீர்கொழும்புகிரிக்கெட்கழகம்எதிர்இராணுவகிரிக்கெட்கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 133 (28.2) தில்ஷான் முனவீர 28, மிசானூர் ரஹ்மான் 24, ஜடின் சக்சேனா 22, சந்தருவன் சிந்தக 22, சுமிந்த லக்ஷன் 4/26, கயான் பண்டார 2/25, அசங்க மனோஜ் 2/25,

இராணுவ கிரிக்கெட் கழகம் 135/5 (11.5) சீக்குகே பிரசன்ன 61, திசர பெரேரா 47*, பசிந்து உஷெட்டிகே 2/30, டில்ஷான் முனவீர 2/41

முடிவு – இராணுவ கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி

ப்ளும்பீல்ட்கிரிக்கெட்கழகம்எதிர்தமிழ்யூனியன்கிரிக்கெட்கழகம்

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் 74 (21.5) தரிந்து லங்காதிலக 29*, நவோத் பரணவிதான 6/08, கவிந்து பத்திரத்ன 4/27

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 79/1 (15.2) ரோன் சந்திரகுப்த 45, சித்தார ஹபுஹின்ன 22

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுகளால் வெற்றி

செபஸ்டியனைட்ஸ்கிரிக்கெட்கழகம்எதிர்சரசென்ஸ்விளையாட்டுக்கழகம்

செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம்; 272/9 (50) சச்சா டி அல்விஸ் 58, லொஹான் டி சொய்சா 57, சச்சித ஜயதிலக 35, தவீஷ கஹதுவாராச்சி 3/19, சந்துன் மென்டிஸ் 2/43, கவிக டில்ஷான் 2/47

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் 254/9 (50) பசால் சுப்ஹான் 50, மொஹமட் வகாஸ் 35, சந்துன் மெண்டிஸ் 34, நவிந்து விதானகே 29, சாமல்கர் டி சில்வா 4/44, தரிந்து ரத்நாயக்க 2/55

முடிவு – செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் 18 ஓட்டங்களால் வெற்றி

பொலிஸ்விளையாட்டுக்கழகம்களுத்துறைநகரகழகம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் 163 (49) அஷேன் பண்டார 46, சாமர சில்வா 40, சதுரங்க குமார 23, தரிந்து சிறிவர்தன 2/20, அபிஷேக் ஆனந்தகுமார 2/22, கவ்ஷான் குலசூரிய 2/5

களுத்துறை நகர கழகம் 149 (46.2) கனிஷ்க மதுவந்த 35, அபிஷேக் ஆனந்தகுமார 28, டி வீரசிங்க 25, தரிந்து சிறிவர்தன 23*, மலித் டி சில்வா 4/28, நதீர பாலசூரிய 3/33, ஹேஷான் தனுஷ்க 2/0

முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 14 ஓட்டங்களால் வெற்றி

பாணந்துறைவிளையாட்டுக்கழகம்எதிர்விமானப்படைவிளையாட்டுக்கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் 139 (44) நிமேஷ் விமுக்தி 34, தேஷான் பெர்னாண்டோ 4/35, மொவின் சுபசிங்க 2/20, துலாஞ்சன மெண்டிஸ் 2/25

விமானப்படை விளையாட்டுக் கழகம் 140/6 (45.4) ராஜித ரத்நாயக்க 36, ஆதித்ய சிறிவர்தன 33*, கோஷான் தனுஸ்க 2/16, நிமேஷ் விமுக்தி 2/32

முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி

குருநாகல்இளையோர்கிரிக்கெட்கழகம்எதிர்கடற்படைவிளையாட்டுக்கழகம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் 218/5 (50) கயான் மனீஷன் 94, டில்ஷான் கொல்லுரே 56, லஹிரு ஜயரத்ன 44, டிலங்க அவுவர்ட் 2/53

கடற்படை விளையாட்டுக் கழகம் 221/5 (44.4) மதுர மதுஷங்க 74*, சச்சித்ர சேனாநாயக்க 45, சுபுன் லீலாரத்ன 29, சுஹங்கா விஜேவர்தன 26, மதுரங்க நவீன் 2/29, லஹிரு ஜயரத்ன 2/5

முடிவு – கடற்படை விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி

NCC கழகம் எதிர் லங்கா கிரிக்கெட் கழகம்

NCC கழகம் 243/7 (50) லஹிரு உதார 92, அசெல் சிகேரா 61*, சச்சிந்து கொலம்பகே 23*, மிரங்க விக்ரமகே 3/35, சந்துன் அபேயவர்தன 2/40

லங்கா கிரிக்கெட் கழகம் 75 (31.2) சதீஷ் ஜயவர்தன 24, மிரங்கா விக்ரமகே 22, அசெல் சிகேரா 4/22, நிபுன் ரன்சிக 2/09

முடிவு – NCC கழகம் 168 ஓட்டங்களால் வெற்றி

பதுரெலியகிரிக்கெட்கழகம்எதிர்கொழும்புகோல்ட்ஸ்கிரிக்கெட்கழகம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் 115 (37.3) தாரக வதுகே 23, அனுக் பெர்னாண்டோ 23, அகில தனஞ்சய 5/27, முதித லக்ஷான் 3/16

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 116/2 (21.2) தனஞ்சய லக்ஷான் 53*, அவிஷ்க பெரேரா 26

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி

காலிகிரிக்கெட்கழகம்எதிர்கொழும்புகிரிக்கெட்கழகம்

காலி கிரிக்கெட் கழகம் 190 (45.3) ஹரீன் புத்தில 47, தரிந்து அமரசிங்க 34, நுவன் பிரியதர்ஷன 21, மலிந்த புஷ்பகுமார 4/30, வனிந்து ஹசரங்க 2/38, அஷான் பிரியஞ்சன் 2/43

கொழும்பு கிரிக்கெட் கழகம் 193/1 (25.1) பவந்த வீரசிங்க 87, நிமேஷ குணசிங்க 80*

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுகளால் வெற்றி

நுகேகொடவிளையாட்டுக்கழகம்எதிர்BRCகழகம்

நுகேகொட விளையாட்டுக் கழகம் 151 (34.3) நயன பெர்னாண்டோ 69, பெதும் மதுசங்க 25, துவிந்து திலகரத்ன 4/26, துஷான் ஹேமந்த 3/35

BRC கழகம் 155/1 (14.5) திலான் ஜயலத் 85*, திலகரத்ன சம்பத் 50

முடிவு – BRC கழகம் 9 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<