ThePapare.com: பிரீமியர் லீக் வாரத்தின் சிறந்த வீரர் யார்?

95

இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) தொடரின் ஐந்தாவது வாரத்தின் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் ThePapare.com ரசிகர்களான உங்களுக்கு வாரத்தின் சிறந்த வீரருக்காக வாக்களிக்க முடியும்.

[socialpoll id=”2520025″]

ஈடன் ஹசார்ட் (செல்சி)

பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் ஹசார்டின் மற்றொரு அபார ஆட்டம் காடிப் சிட்டியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்த செல்சிக்கு உதவியது. போட்டியின் ஆரம்பத்திலேயே பின்தங்கிய செல்சிக்கு ஹசார்ட் மற்றும் ஒலிவியர் கிரௌட் இணைந்து முதல் இரண்டு கோல்களையும் போட்டனர். தொடர்ந்து ஹசார்ட் பெனால்டி ஒன்றை கோலாக மாற்றினார். வில்லியன் மற்றொரு கோலை போட 4-1 என வெற்றிபெற்ற செல்சி இந்த பருவத்தை 100 வீத வெற்றிகளுடன் தொடரில் முன்னேறுகின்றது.

லிவர்பூல், செல்சி அணிகளுக்கு தொடர்ந்து ஐந்தாவது வெற்றி

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது …

ரியான் பிரேசர் (போர்ன்மௌத்)

கோல் விருந்துடன் லெய்செஸ்டர் சிட்டி அணியை போர்ன்மௌத் வீழ்த்தியது. ரியான் பிரேசரின் அதிரடி ஆட்டத்தால் முதல் பாதியிலேயே போர்ன்மௌத் 3 கோல்களை பெற்று ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து பிரேசர் பந்தை பரிமாற்ற அந்த அணியால் 4-0 என முன்னிலை பெற முடிந்தது. ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்ட லெய்செஸ்டர் கடைசி நேரத்தில் இரண்டு கோல்களை பெற்றபோதும் அவை கால தாமதமான கோல்களாகவே இருந்தன.   

கிரானிட் ஷகா (ஆர்சனல்)

சுவிட்சர்லாந்தின் மத்தியகள வீரர் ஷகாவின் தீர்க்கமான ஆட்டத்தால் ஆர்சனல் அணிக்கு வெற்றியை உறுதி செய்ய முடிந்தது. நியூகாஸிலின் சொந்த மைதானமான செயின்ட் ஜேம்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஷகாவின் அபார பிரீ கிக் மூலம் ஆர்சனல் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து மெசுட் ஒசில் இரண்டாவது கோலைப் போட்டார். கடைசி நிமிடங்களில் சியரான் கிளார்க் நியூகாஸிலுக்கு ஒரு கோலை போட்டபோதும் அது போதுமாக இருக்கவில்லை.

புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றது பார்சிலோனா

லாலிகா கால்பந்து சுற்றின் நான்காவது வாரத்திற்கான …

மருவான் பெளைனி (மன்செஸ்டர் யுனைடெட்)

மன்செஸ்டர் அணி இரண்டாவது கோலை பேற உதவிய பெளைனி, மத்திய களத்தில் முழு கட்டுப்பட்டையும் தனதாக்கி அன்றைய தினத்தை யுனைடெட்டின் தினமாக மாற்றினார். வட்போர்ட்டை அவர்களின் சொந்த மைதானத்தில் வீழ்த்தி மன்செஸ்டர் யுனைடெட் நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ரொமெலு லுகாகு யுனைடெட்டின் முதல் கோலை போட்டதோடு வட்போர்டுக்காக அன்ட்ரே கிரேய் கோல் புகுத்தினார். மடிக் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேறியதால் யுனைடெட் கடைசி ஒருசில நிமிடங்களை 10 வீரர்களுடனேயே ஆடியது.

மார்கோ அர்னோடோவிக் (வெஸ்ட் ஹாம்)

ஒரு கோல் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய மார்கோ அர்னோடோவிக் ஒரு கோலை புகுத்தி எவர்டனை 3-1 என வீழ்த்த வெஸ்ட் ஹாமுக்கு உதவினார். இது இந்த பருவத்தில் வெஸ்ட் ஹாம் பெறும் முதல் வெற்றியாகும்.

தனது 65 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய வெஸ்ட் ஹாம் முகாமையாளர் மனுவேல் பெல்லக்ரினிக்கு 3 புள்ளிகள் பிறந்த நாள் பரிசாக கிடைத்தது. அன்ட்ரி யார்மொலன்கோ ஆரம்பத்தில் இரண்டு கோல்களை பெற்றபோதும், அதற்கு அர்னோடோவிக் எதிரணி பாதுகாப்பு அரணை முறியடித்து சந்தர்ப்பம் பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    

ThePapare.com இன் பிரீமியர் லீக் போட்டி நாயகன் – ஈடன் ஹசார்ட்

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…