தேசிய விளையாட்டு விழா கிரிக்கெட்டில் கிழக்கு மாகாணத்திற்கு மூன்றாமிடம்

127
3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாண அணி

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கிரிக்கெட் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் மேல் மாகாணமும், பெண்கள் பிரிவில் சப்ரகமுவ மாகாணமும் சம்பியன்களாகத் தெரிவாகயிருந்துடன், கிழக்கு மாகாண ஆண்கள் அணி 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க கிரிக்கெட்டுடன் மீண்டும் இணையும் ஏபி டி வில்லியர்ஸ்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் தலைவர்…

இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் போட்டிகள் எம்பிலிபிட்டிய மகாவலி மைதானத்தில் கடந்த 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் இலங்கையின் 9 மாகாணங்களையும் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றிருந்தன.

அணிக்கு 11 பேர் கொண்ட 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது இடத்தினை தெரிவு செய்வதற்கான போட்டி கடந்த 16ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண அணிகள் மோதின.

இதில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிழக்கு மாகாண அணியினர் முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தனர். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சப்ரகமுவ மாகாண அணியினர் 13.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 43ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.

கிழக்கு மாகாண அணி சார்பாக அன்சாரி 7 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார். இதனையடுத்து 44 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி, 6.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 44 ஓட்டங்களை பெற்று வெற்றியைப் பதிவு செய்தது.

கிழக்கு மாகாண அணிக்காக நிக்ஸி 20 ஓட்டங்களையும், அக்ரம் ஆட்டமிழக்காது 14 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இலங்கை அணி வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படு வருகின்ற “கிரிக்கெட் எய்ட்”..

இதேநேரம், அணிக்கு 6 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பெண்கள் கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது இடத்தினை தெரிவு செய்வதற்கான போட்டியில் கிழக்கு மாகாண அணியும், வட மாகாண அணியும் போட்டியிட்டன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண வீராங்கனைகள் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.   

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வட மாகாண அணி, 4.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 59 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கினை அடைந்தது. இதன்படி, வட மாகாண பெண்கள் கிரிக்கெட் அணி மூன்றாவது இடத்தினைப் பெற்றுக்கொண்டது.

  • ஆண்கள் பிரிவில் சிறந்த வீரர் - ஐ.ஆர் முனசிங்க

எனினும், வட மாகாண ஆண்கள் கிரிக்கெட் அணி, மேல் மாகாண அணியுடன் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேசிய மட்ட கிரிக்கெட் போட்டியின் ஆண்கள் பிரிவில் மேல் மாகாண அணி முதலாமிடத்தினையும், வடமேல் மாகாண அணி இரண்டாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.

அத்துடன், பெண்கள் பிரிவில் சப்ரகமுவ மாகாணம் முதலாமிடத்தையும், மேல் மாகாணம் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை போட்டித் தொடரின் சிறந்த வீரருக்கான விருதை மேல் மாகாணத்தைச் சேர்ந்த .ஆர் முனசிங்க பெற்றுக்கொள்ள, சிறந்த வீராங்கனைக்கான விருதை சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த தர்ஷனி ருக்ஷலாவும் பெற்றுக்கொண்டனர்.