கோல்ட்ஸ் கழகத்துக்காக பந்துவீச்சில் மிரட்டிய அகில, சிராஸ்

1014

இலங்கையின் பிரதான கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் இன்று (20) நடைபெற்ற போட்டிகளில் சனுக துலாஜ், மதுரங்க சொய்ஸா, சஹன் ஆராச்சிகே, அஹான் விக்ரமசிங்க, தரூஷ பெர்னாண்டோ மற்றும் புலின தரங்க ஆகியோர் அரைச்சதங்கள் அடித்து அசத்தியிருந்தனர்.

இதனிடையே, NCC கழக வீரர் அஷைன் டேனியல், கடற்படை விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக 5 விக்கெட்டுக்களைவ வீழ்த்தியிருந்தார்.

மக்கொன சர்ரே கிரிக்கெட் மைதானத்தில் பதுரெலிய விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 56 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 167 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பதிலெடுத்தாடிய பதுரெலிய கிரிக்கெட் கழகம் 111 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்தப் போட்டியில் கோல்ட்ஸ் கழக வீரர்களான அகில தனன்ஜய 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், மொஹமட் சிராஸ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதேவேளை, Ace Capital கழகத்துக்கு எதிரான போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 65 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இதில் சிலாபம் மேரியன்ஸ் கழகத்துக்காக புலின தரங்க அரைச்சதம் அடித்து கைகொடுத்தார்.

மற்றொரு போட்டியில் கடற்படை விளையாட்டுக் கழகத்தை NCC கழகம் 168 ஓட்டங்களால் வென்றது. இந்தப் போட்டியில் NCC கழகத்தின் இளம் வேகப்பந்துவீச்சாளர் அஷைன் டேனியல் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, பாணந்துறை விளையாட்டு கழகத்திற்கு எதிராக பொலிஸ் விளையாட்டுக் கழகமும், காலி கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகமும் வெற்றியீட்டின.

இதனிடையே, இன்று நடைபெறவிருந்த ஐந்து போட்டிகள் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டிகளின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 167/10 (48.2) – விஷாத் ரன்திக 24, முதித்த லக்ஷான் 20, ஜீவன் மெண்டிஸ் 3/40, ருச்சிர கோஷித 2/17, புத்திக சன்ஜீவ 2/37, அலன்கார அசங்க சில்வா 2/28

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 111/10 (42.1) – புத்திக சன்ஜீவ 33, மிதிர தேனுர 22, அகில தனன்ஜய 4/21, மொஹமட் சிராஸ் 3/23, முதித்த லக்ஷான் 2/32

முடிவு – கோல்ட்ஸ் கழகம் 56 ஓட்டங்களால் வெற்றி


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 169/10 (37.4) – புலின தரங்க 55, விஷ்வ சதுரங்க 33, அவிந்து 32, சானக்க கொமசாரு 4/20, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/33, இரோஷ் சமரசூரிய 2/01

Ace Capital கிரிக்கெட் கழகம் – 104/10 (32) – ஜனக் பிரகாஷ்24, திக்ஷில டி சில்வா 3/24, அவிந்து தீக்ஷன 2ஃ12, கசுன் வீரங்க 2/16, கமிந்து மெண்டிஸ் 2/29

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கழகம் 65 ஓட்டங்களால் வெற்றி


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 170/10 (44.3) – சனுக துலாஜ் 64, மாலிங்க அமரசிங்க 31*, நிமன்த பீரிஸ் 21, அசேல சிகேரா 4/30, நலின் பிரியதர்ஷன 2/22, நிசல தாரக 2/24

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 171/5 (34.2) – மதுரங்க சொய்ஸா 51, அஷேன் பண்டார 30, திலகரட்ன சம்பத் 29, சாமர சில்வா 24, நிமேஷ் விமுக்தி 2/33, சன்ஜய சதுரங்க 2/35

முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி


NCC கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

NCC கழகம் – 256/8 (50) – சஹன் ஆராச்சிகே 62, அஹான் விக்ரமசிங்க 60, கவீன் பண்டார 43, லஹிரு உதார 39, தம்மிக பிரசாத் 2/39, புத்திக மதுஷான் 2/21

கடற்படை விளையாட்டுக் கழகம் – 88/10 (32.4) – அனுக் பெர்னாண்டோ 26, அஷைன் டேனியல் 5/20, சதுரங்க டி சில்வா 2/08

முடிவு – NCC கழகம் 168 ஓட்டங்களால் வெற்றி


காலி கிரிக்கெட் கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்

காலி கிரிக்கெட் கழகம் – 163ஃ9 (45) – லிசுல லக்ஷான் 34, டில்ஷான் கான்ஞன 30, யசோதா லங்கா 21, சாமிக்க எதிரிசிங்க 3/24, சச்சித ஜயதிலக 2/34

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 164/5 (41.3) – தரூஷ பெர்னாண்டோ 75*, சசித்த ஜயதிலக்க 28*, சஷ்ரிக புஸ்ஸேகொல்ல 26, ஹரீன் புத்தில 2/22, ரஜித் பிரியான் 2/41

முடிவு – செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<