ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள கிறிஸ் கெயில்

84
Courtesy - Getty Images

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயில், இந்த ஆண்டு இடம்பெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்துடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் காணப்படும் கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டிகளில் இதுவரையில் 9,777 ஓட்டங்கள் வரையில் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் மூன்று மாற்றங்கள்

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடருக்காக …

அதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக சதங்கள் (23) பெற்ற வீரராக  இருக்கும் கிறிஸ் கெயில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் முதற்தடவையாக இரட்டைச்சதம் கடந்த துடுப்பாட்ட வீரராகவும் இருக்கின்றார்.

தொன்னூறுகளின் பிற்பகுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அறிமுகமாகிய கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வராத போதிலும், இங்கிலாந்தில் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளாக இடம்பெறும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் தனது அணிக்காக சிறப்பாக செயற்படுவார் எனத் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது 39ஆவது வயதாகும் கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதால், இங்கிலாந்து அணியுடன் புதன்கிழமை (20) மேற்கிந்திய தீவுகளின் சொந்த மண்ணில் ஆரம்பமாகும் ஒருநாள் தொடரே கெயிலின் தாயகத்தில் அவர் கடைசியாக விளையாடும் ஒரு நாள் தொடராக அமையவுள்ளது.  

கிறிஸ் கெயிலிடம் உலகக் கிண்ணத்தின் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவது பற்றி வினவப்பட்ட போது தான் ஓய்வு பெறுவதனால் இளம் வீரர்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணியில் ஜொலிக்கும் ஒரு சந்தர்ப்பம் உருவாக்கப்படும் எனத் தெரிவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<