LPL போட்டி அட்டவணை வெளியீடு; இரு மைதானங்கள் தெரிவு

262
LPL 2023 Fixtures have been announced

நான்காவது பருவத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் போட்டி அட்டவணை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மூலம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 2023ஆம் ஆண்டுக்கான போட்டிகள் ஜூலை மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

ஐந்து அணிகள் இம்முறையும் பங்கெடுக்கும் இந்த தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த வாரம் நிறைவுக்கு வந்த நிலையிலேயே, தொடரின் போட்டி அட்டவணையும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இம்முறை தொடரில் இறுதிப் போட்டி அடங்கலாக மொத்தம் 23 போட்டிகள் நடைபெறவுள்ளதோடு, தொடர் நடாத்துவதற்காக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் மற்றும் கண்டி பல்லேகல சர்வதேச மைதானம் ஆகியவை தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இதில் தொடரின் ஆரம்பகட்ட லீக் போட்டிகள் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்திலும், அதன் பின்னர் கண்டியிலும் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

LPL தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணியும், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதுகின்றன. அத்துடன் தொடரின் மாலை நேர லீக் போட்டிகள் பி.ப. 3 மணிக்கு ஆரம்பமாகுவதுடன், இரவு நேரப் போட்டிகள் பி.ப. 7 மணிக்கு நடைபெறவிருக்கின்றன.

இதேவேளை இம்முறை LPL தொடரின் இறுதிப் போட்டிக்காக மேலதிக நாள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

2023ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டி ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு, தொடரின் இறுதிப் போட்டிக்காக மேலதிக நாள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

போட்டி அட்டவணைLPL 2023 Fixtures have been announced

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைபு படிக்க <<