LPL 2022 தொடரில் பங்கெடுக்கும் வீரர்கள் குழாம் அறிவிப்பு

485

லங்கா பிரீமியர் லீக் (LPL) – 2022 T20 தொடரில் பங்கெடுக்கும் அணிகளது வீரர்கள் குழாம்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மூன்றாவது பருவகாலத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் போட்டிகள் அடுத்த மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றன. இந்த நிலையில் இந்த தொடரில் பங்கெடுக்கும் ஐந்து அணிகளினதும் வீரர்கள் குழாம்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இலங்கை குழாத்தில் இணையும் இரு புதுமுக வீரர்கள்!

ஒவ்வொரு அணியும் தமது குழாத்தில் 24 வீரர்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், இந்தப் பருவத்தில் தம்புள்ளையினை பிரதிநிதித்துவம் செய்கின்ற அணி, ”ஓவ்ரா தம்புள்ள (Aura Dambulla)” என புதிதாக பெயர் மாற்றம் செய்திருக்கின்றது.

இதேவேளை அறிவிக்கப்பட்டிருக்கும் அணிக் குழாம்களில் காணப்படும் வீரர்களில் முக்கியமானவர்களாக கொழும்பு ஸ்டார்ஸ் அணி வீரர் பென்னி ஹொவேல் காணப்படுகின்றார். பிரான்ஸை பிறப்பிடமாக கொண்ட  இவர் சகலதுறைவீரராக உலகின் பல்வேறு T20 லீக்குகளில் ஆடிய அனுபவத்தினைப் பெற்றிருக்கின்றார்.

அதேநேரம் சத்திர சிகிச்சைக்கு முகம் கொடுத்த குசல் பெரேரா அதில் இருந்து தேறியதனை அடுத்து அவர் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக் குழாத்தில் இடம்பெற்றிருக்கின்றார். அதோடு உபாதைக்குள்ளான மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ ஜப்னா கிங்ஸ் அணியில் பெயரிடப்பட்டிருக்கின்றார்.

ஜப்னா கிங்ஸ் அணியில் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தி வருகின்ற யாழ்.வீரர்களான சுழல்பந்துவீச்சாளர் தீஷன் விதுசன், விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் தெய்வேந்திரம் டினோஷன் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

காயத்தால் மற்றுமொரு தொடரை தவறவிடும் ரவீந்திர ஜடேஜா

அத்துடன் ஜப்னா கிங்ஸ் அணியில் நியூசிலாந்தின் சகலதுறைவீரர் ஜிம்மி நீஷம், பாகிஸ்தானின் சகலதுறை நட்சத்திரம் சொஹைப் மலிக் ஆகியோர் அதில் காணப்படும் முக்கிய வெளிநாட்டுவீரர்களாக காணப்படுகின்றனர்.

இதேநேரம் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த இப்திக்கார் அஹ்மட், இமாட் வஸீம், மொஹமட் ஹஸ்னைன், சர்பராஸ் அஹ்மட் மற்றும் அன்வர் அலி ஆகிய வீரர்கள் பெயரிடப்பட்டிருக்கின்றனர்.

கண்டி பல்கோன்ஸ் அணி மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர்களான கார்லோஸ் ப்ராத்வைட் மற்றும் பேபியன் அலன் ஆகிய வீரர்களை உள்வாங்கியிருக்க, ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான சிக்கந்தர் ரஷா ஓவ்ரா தம்புள்ள அணியில் பெயரிடப்பட்டிருக்கின்றார்.

அதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவராக காணப்படும் திமுத் கருணாரட்ன, 2022ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமீயர் லீக் தொடரில் ஆடுவார் எனக் கூறப்பட்டிருந்த போதும் அவர் எந்த அணியிலும் பெயரிடப்படவில்லை.

அணிக் குழாம்கள்

  • கொழும்பு ஸ்டார்ஸ்பென்னி ஹொவேல், அஞ்செலோ மெதிவ்ஸ், ரொமாரியோ செபார்ட், சரித் அசலன்க, டொமினிக் ட்ரேக்ஸ், ரவி பொபரா, நவீன்-உல்-ஹக், நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஞய லக்ஷான், தினேஷ் சந்திமால், கரீம் ஜனாட், சீக்குகே பிரசன்ன, ஜெப்ரி வன்டர்செய், நிஷான் மதுஷ்க, முதித லக்ஷான், லக்சித மனாசிங்க, கெவின் கொத்திகொட, சத்துரங்க குமார, நவோத் பரணவிதான, சமோத் பட்டகே, சுரங்க லக்மால், கசுன் ராஜித
  • ஓவ்ரா தம்புள்ள – சிக்கந்தர் ரஷா, தசுன் ஷானக்க, நூர் அஹ்மட், பானுக்க ராஜபக்ஷ, டொம் அபேல், ஜோர்டன் கொக்ஸ், ஹைதர் அலி, லஹிரு குமார, ரமேஷ் மெண்டிஸ், சத்துரங்க டி சில்வா, போல் வான் மீக்கிரீன், ப்ரமோத் மதுசான், லசித் குரூஸ்புள்ளே, தரிந்து ரத்நாயக்க, கலன பெரேரா, திலும் சுதீர, சச்சித ஜயத்திலக்க, துஷான் ஹேமன்த, செவோன் டேனியல், ரவின்து பெர்னான்டோ, லஹிரு மதுசங்க, சமிந்து விக்ரமசிங்க
  • கோல் கிளேடியேட்டர்ஸ் – இமாத் வஸீம், குசல் மெண்டிஸ், இப்திக்கார் அஹ்மட், குசல் ஜனித் பெரேரா, மொஹமட் ஹஸ்னைன், சர்பராஸ் அஹ்மட், அசாம் கான், நுவான் பிரதீப், லக்ஷான் சந்தகன், நுவான் துஷார, அன்வர் அலி, நுவனிது பெர்னாண்டோ, நிமேஷ் விமுக்தி, புலின தரங்க, மொவின் சுபாசிங்க, நிபுன் மாலிங்க, சச்சிந்து கொலம்பகே, லக்ஷான் கமகே, தரிந்து கௌசால், சம்மு அஷான்
  • ஜப்னா கிங்ஸ் – ஜிம்மி நீஷம், திசர பெரேரா, டொம் கொஹ்லேர்-கட்மோர், தனன்ஞய டி சில்வா, தனன்ஞய டி சில்வா, சொஹைப் மலிக், ஜேம்ஸ் முல்லர், ரஹ்மானுல்லா குர்பாஸ், மகீஸ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, துனித் வெலால்கே, வகார் சலமாக்கில், சதீர சமரவிக்ரம, பிரவீன் ஜயவிக்ரம, டில்சான் மதுசங்க, நிப்புன் தனன்ஞய, விஜயகாந்த் வியாஸ்காந்த், தீசன் விதுசன், தெய்வேந்திரம் டினோஷன், அசான் ரண்திக்க, அவிஷ்க பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ
  • கண்டி பல்கோன்ஸ் – கார்லோஸ் ப்ராத்வைட், வனிந்து ஹஸரங்க, பேபியன் அலன், சாமிக்க கருணாரட்ன, அன்ட்ரே பிளச்சர், ஒசானே தோமஸ், இசுரு உதான, மதீஷ பத்திரன, அஷேன் பண்டார, நஜிபுல்லா சத்ரான், அஷான் பிரியஞ்சன், மினோத் பானுக்க, கமிந்து மெண்டிஸ், அவிஷ்க பெரேரா, அஷைன் டேனியல், மலின்த புஷ்பகுமார, ஜனித் லியனகே, லசித் அபேய்ரத்ன, கவின் பண்டார, பெதும் நிஸ்ஸங்க, சமிந்து விஜேசிங்க

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<