Home Tamil வியாஸ்காந்தின் பிரகாசிப்புடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஜப்னா

வியாஸ்காந்தின் பிரகாசிப்புடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஜப்னா

Lanka Premier League 2022

1113
Kandy Falcons vs Jaffna Kings

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இன்று (21) நடைபெற்ற முதலாவது குவாலிபையர் (Qualifier) போட்டியில் வியாஸ்காந்த் மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரினதும் துல்லியமான பந்துவீச்சின் உதவியுடன், கண்டி பல்கொன்ஸை டக்வர்த் லூயிஸ் முறைப்படி 24 ஓட்டங்களால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுக்கொண்டது.

இதன்மூலம் LPL போட்டிகள் வரலாற்றில் தொடர்ச்சியாக 3ஆவது தடவையாக திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், கண்டி பல்கொன்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் மோதியிருந்தன.

இதில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி பல்கொன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய கண்டி பல்கொன்ஸ் அணி அண்ட்ரூ பிளச்சரின் விக்கெட்டை ஆரம்பத்தில் இழந்த போதும், பெதும் நிஸ்ஸங்கவின் நிதானமான ஆட்டத்துடன், ஓட்டங்களைக் குவிக்க தொடங்கியது.

சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடிய பெதும் நிஸ்ஸங்க 35 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 26 ஓட்டங்களுடனும் வியாஸ்காந்தின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வெளியேறினர்.

மத்திய வரிசையில் வந்த நஜிபுல்லாஹ் சத்ரான் மாத்திரம் 22 ஓட்டங்களை எடுத்து நம்பிக்கை கொடுத்தாலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் கண்டி பல்கொன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்த வியாஸ்காந்த் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷன 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 144 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 5.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 63 ஓட்டங்களை எடுத்தபோது மழையின் குறுக்கீட்டினால் போட்டி தடைப்பட்டது.

அப்போது டக்வர்த் லூயிஸ் முறைமைப் படி 47 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருக்க ணே;டிய ஜப்னா கிங்ஸ் அணி 16 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

எவ்வாறாயினும், மழை விட்ட பிறகு போட்டியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இரண்டாவது தடவையாகவும் மழையின் குறுக்கீட்டினால் போட்டி தடைப்பட்டது.

அப்போது ஜப்னா கிங்ஸ் அணி, 11 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களைப் எடுத்திருந்தது. ஆனால், டக்வர்த் லூயிஸ் முறைப்படி ஜப்னா கிங்ஸுக்கு 11 ஓவர்களில் 75 ஒட்டங்களே வெற்றி இலக்காக தேவைப்பட்டிருந்தது. இதனால் ஜப்னா கிங்ஸ் அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ 11 பந்துகளில் 21 ஓட்டங்களையும், துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 19 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர். கண்டி பல்கொன்ஸ் அணியின் பந்துவீச்சில் கார்லொஸ் பிராத்வெயிட் 2 விக்கெட்டுகளையும், சாமிக்க கருணாரத்ன ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா கிங்ஸ் அணிக்காக பந்துவீச்சில் பிரகாசித்த விஜயகர்ந்த் வியாஸ்காந்த் தெரிவாகினார். கடந்த 3 ஆண்டுகளாக LPL தொடரில் விளையாடி வருகின்ற வியாஸ்காந்த், முதல் தடவையாக ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய ஜப்னா கிங்ஸ் அணி, 23ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற, தோல்வியைத் தழுவிய கண்டி பல்கொன்ஸ் அணி, இன்று இரவு நடைபெறுகின்ற எலிமினேட்டர் போட்டியில் வெற்றியீட்டுகின்ற அணியுடன் நாளை (22) பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

Result


Kandy Falcons
143/8 (20)

Jaffna Kings
98/3 (11)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b Vijayakanth Viyaskanth 35 31 5 0 112.90
Andre Fletcher c Vijayakanth Viyaskanth b Thisara Perera 2 6 0 0 33.33
Kamindu Mendis c Thisara Perera b Vijayakanth Viyaskanth 26 21 3 0 123.81
Ashen Bandara b Vijayakanth Viyaskanth 13 13 1 0 100.00
Najibullah Zadran st Sadeera Samarawickrama b Mahesh Theekshana 22 17 0 1 129.41
Wanidu Hasaranga c Shoaib Malik b Zaman Khan 3 4 0 0 75.00
Fabian Allen c Rahmanullah Gurbaz b Mahesh Theekshana 6 4 1 0 150.00
Carlos Brathwaite c Thisara Perera b Binura Fernando 12 10 0 1 120.00
Chamika Karunaratne not out 14 13 0 0 107.69
Isuru Udana not out 2 1 0 0 200.00


Extras 8 (b 0 , lb 4 , nb 0, w 4, pen 0)
Total 143/8 (20 Overs, RR: 7.15)
Bowling O M R W Econ
Thisara Perera 2 0 17 1 8.50
Binura Fernando 4 0 23 1 5.75
Zaman Khan 4 0 31 1 7.75
Mahesh Theekshana 4 0 24 2 6.00
Vijayakanth Viyaskanth 4 0 30 3 7.50
Shoaib Malik 2 0 14 0 7.00


Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Isuru Udana b Carlos Brathwaite 10 8 0 1 125.00
Avishka Fernando c Kamindu Mendis b Carlos Brathwaite 21 11 5 0 190.91
Afif Hossain c & b Chamika Karunaratne 14 9 2 0 155.56
Sadeera Samarawickrama not out 15 15 1 0 100.00
Dunith wellalage not out 19 23 2 0 82.61


Extras 19 (b 0 , lb 0 , nb 0, w 19, pen 0)
Total 98/3 (11 Overs, RR: 8.91)
Bowling O M R W Econ
Isuru Udana 2 0 31 0 15.50
Carlos Brathwaite 3 0 32 2 10.67
Chamika Karunaratne 2.4 0 15 1 6.25
Wanidu Hasaranga 2 0 8 0 4.00
Fabian Allen 1 0 8 0 8.00
Chamindu Wijesinghe 0.2 0 4 0 20.00



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<