LPL போட்டி அட்டவணையும், அணிகளின் பெயர்களும்!

5813
espncricinfo

இலங்கையின் கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த லங்கா ப்ரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை மற்றும் தொடரில் பங்கேற்கும் அணிகளின் பெயர்கள் என்பன எமது Thepapare.com இணையத்தளத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 

LPL தொடரில் வசீம் அக்ரம், சொஹைப் அக்தர், லாராவுக்கு முக்கிய பதவி

எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி LPL தொடர் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளதுடன், நொக்-அவுட் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன பல்லேகலையில் நடைபெறவுள்ளன. இதற்கிடையில் குழுநிலை போட்டிகள் சூரியவெவ, பல்லேகலை ஆகிய மைதானங்களில் நடைபெற்று, இறுதிக்கட்ட குழுநிலை போட்டிகள் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

LPL தொடரின் ஆரம்ப நிகழ்வு 14ம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் 5 அணிகளின் பங்கெடுப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இதில், கொழும்பு லயன்ஸ், தம்புள்ளை ஹோக்ஸ், காலி க்ளேடியேட்டர்ஸ், யாழ்ப்பாணம் கோப்ராஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் என அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.

முக்கியமாக LPL தொடரானது இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற மைதானமான ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக போட்டிகள் அங்கு நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Video – இலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக வீரர்கள்..! |Sports RoundUp – Epi 131

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் LPL தொடரின் உரிமையாளர்களான IPG குழுமம் என்பன உத்தியோகபூர்வமாக அணியின் உரிமையாளர்கள் மற்றும் அணியின் பெயர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கன் ப்ரீமியர் லீக்கின் போட்டி அட்டவணை

  • November 14 –  8 P.M. – Galle vs Colombo – Sooriyawewa ICS
  • November 15 –  4 P.M. – Kandy vs Jaffna – Sooriyawewa ICS
  • November 15 –  8 P.M. – Colombo vs Dambulla – Sooriyawewa ICS
  • November 17 –  4 P.M. – Colombo vs Galle – Sooriyawewa ICS
  • November 17 –  8 P.M. – Dambulla vs Jaffna – Sooriyawewa ICS
  • November 18 –  4 P.M. – Galle vs Dambulla – Sooriyawewa ICS
  • November 18 –  8 P.M. – Colombo vs Kandy – Sooriyawewa ICS
  • November 21 –  4 P.M. – Kandy vs Jaffna – Pallekele ICS
  • November 21 –  8 P.M. – Dambulla vs Colombo – Pallekele ICS
  • November 22 –  4 P.M. – Jaffna vs Colombo – Pallekele ICS
  • November 22 –  8 P.M. – Kandy vs Galle – Pallekele ICS
  • November 24 –  4 P.M. – Jaffna vs Colombo – Pallekele ICS
  • November 24 –  8 P.M. – Galle vs Kandy – Pallekele ICS
  • November 27 –  4 P.M. – Kandy vs Dambulla – Dambulla ICS
  • November 27 –  8 P.M. – Jaffna vs Galle – Dambulla ICS
  • November 28 –  4 P.M. – Dambulla vs Galle – Dambulla ICS
  • November 28 –  8 P.M. – Kandy vs Colombo – Dambulla ICS
  • November 29 –  8 P.M. – Dambulla vs Jaffna – Dambulla ICS
  • December 01 –  4 P.M. – Dambulla vs Kandy – Dambulla ICS
  • December 01 –  8 P.M. – Galle vs Jaffna – Dambulla ICS
  • December 05 – 4 P.M. – 1st Semifinal – Pallekele ICS
  • December 05 –  8 P.M. – 2nd Semifinal – Pallekele ICS
  • December 06 –  8 P.M. – Final – Pallekele ICS 

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…