நான்காவது தடவையாக சம்பியனாகிய கொமிலா விக்டோரியன்ஸ்

Bangladesh Premier League 2023

193

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் (BPL) இறுதிப்போட்டியில் சில்ஹெட் ஸ்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி கொமிலா விக்டோரியன்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை நான்காவது தடவையாக தமதாக்கியுள்ளது.

மிர்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜொன்சன் சார்ல்ஸ் மற்றும் லிடன் டாஸ் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  கொமிலா விக்டோரியன்ஸ் அணி வெற்றிபெற்றது.

நடப்புச் சம்பியனுடன் தோல்வியடைந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய சில்ஹெட் ஸ்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 என்ற சவாலான வெற்றியிலக்கை நிர்ணயித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நஜ்முல் ஹொஸைன் செண்டோ 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மத்தியவரிசையில் முஷ்பிகூர் ரஹீம் அனுபவமான துடுப்பாட்டத்துடன் 74 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். இவர்களை தவிர்த்து எந்த வீரர்களும் சாதகமான ஓட்டங்களை பெற்றுக்கொடுக்கவில்லை.

குறிப்பாக இலங்கை அணிசார்பில் முதன்முறையாக 350வது T20  போட்டியில் சில்ஹெட் ஸ்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடிய திசர பெரேரா ஓட்டங்களின்றி ஆட்டமிழந்திருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்கு லிடன் டாஸ் 55 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆரம்பத்தை கொடுக்க, ஜொன்ஸன் சார்ல்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

அதன் அடிப்படையில் கொமிலா விக்டோரின்ஸ் அணியானது 19.2 ஓவர்கள் நிறைவில் வெறும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து தங்களுடைய நான்காவது சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்டது. இதில் முக்கிய அம்சமாக தொடர்ச்சியாக இரண்டாவது தடவையும் சம்பியனாக கொமிலா விக்டோரியன்ஸ் அணி முடிசூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<