சதத்தை தவற விட்ட முதித்த லக்ஷான்; 11ஆவது பெரும் சமர் சமநிலையில் முடிவு

124
Mahnama College vs D S Senanayake College

கொழும்பு மஹாநாம கல்லூரி மற்றும் டி எஸ் சேனநாயக்க கல்லூரிகளுக்கு இடையிலான 11ஆவது பெரும் சமரில் இரு அணிகளும் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியதால் P. சாரா ஓவல் மைதானத்தில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. அதேநேரம் சிறப்பாக துடுப்பாடிய முதித்த லக்ஷான் கொழும்பு மஹாநாம கல்லூரியின் வெற்றி வாய்ப்பை தனது நிதான ஆட்டத்தின் மூலம் சிதறடித்தார்.

டி எஸ் சேனநாயக்க கல்லூரி 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான இருந்த நிலையில் இரண்டாம் நாளாக நேற்றைய தினம் (25) ஆட்டத்தை தொடர்ந்தது. சிறப்பாக துடுப்பாடிய முதித்த லக்ஷான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீட்டார். அதேநேரம் அவருடன் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த ஷெஷாட் அமீன் 55 ஓட்டங்களால் பங்களிப்பு செய்தார்.

[rev_slider dfcc728]

.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீட்டிருந்த முதித்த லக்ஷான் சதம் பெறுவதற்கு இரண்டு ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் 98 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து சென்றார். அதையடுத்து களமிறங்கிய பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க மஹாநாம கல்லூரியைவிட மூன்று ஓட்டங்களால் பின்னிலையுற்ற நிலையில் 97 ஓவர்களில் 268 ஓட்டங்களை பதிவு செய்தது.

அதனையடுத்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய மஹாநாம கல்லூரி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 115 ஓட்டங்களை பெற்ற நிலையில் போதிய நேரமின்மை காரணமாக குறித்த போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது. சிறப்பாக துடுப்பாடிய கவிந்து முனசிங்க 52 ஓட்டங்களையும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த பெத்தும் பொத்தேஜூ 55 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 271/9d (60) – பிஷான் மென்டிஸ் 74, மலிந்து மதுரங்க 70, நிதுக்க வலிக்கல 41, விஹான் முதலிகே 37*, கவிந்து முனசிங்க 22, விஹான்  குணசேகர 6/100, முதித்த லக்க்ஷான் 2/83

டி எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 268 (97) – ஷெஷாட் அமீன் 55, முதித்த லக்ஷான் 98, நிதுக்க வெலிகல 3/81

மஹாநாம கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்க்ஸ்): 115/1 (24.3)– பெத்தும் பொத்தேஜூ 55*, கவிந்து முனசிங்க 52