இலங்கை அணியுடன் மோதுகிறது இலங்கை லெஜண்ட்ஸ் அணி

2114

மேற்கிந்திய தீவுகளில் T20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணிக்கும், இந்தியாவில் தொடர் வெற்றிகளையீட்டி இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ள இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையில் T20 தொடரொன்றை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

தற்போது நடைபெற்று வருகின்ற இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் நிறைவடைந்த பிறகு இதுதொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வீதி பாதுகாப்பு உலக T20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ்

இதுஇவ்வாறிருக்க, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 3ஆவது T20 போட்டியின் இடைநடுவில் ஹரி டிவி என்ற YouTube ஷெனலில் கலந்துகொண்டு பேசிய வினையாட்டுத்துறை அமைச்சர்,

“மைதானத்தில் இலங்கை  லெஜண்ட்ஸ் அணியின் அர்ப்பணிப்பிலிருந்து தற்போதைய வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை பாருங்கள். அவர்கள் எப்போதும் விளையாட்டை வெல்லும் மனப்பான்மையில் இருக்கிறார்கள், இது மைதானத்தில் அவர்களின் உடல் மொழியில் காட்டுகிறது.

டில்ல்ஷானின் களத்தடுப்பைப் பாருங்கள். சனத் ஜயசூரிய துடுப்பாட்டத்தில்  தோல்வியடைந்தபோது பந்துவீச்சை எவ்வாறு செய்கிறார் என்பதைப் பாருங்கள், இதைத்தான் தற்போதைய எமது வீரர்கள் இலங்கை லெஜண்ட்ஸ் அணியிடம்  கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

Video – ஒருநாள் தொடரில் கலக்கிய இலங்கையின் மும்மூர்த்திகள்..!|Sports RoundUp – Epi 153

இதனிடையே, இலங்கை அணிக்கும், இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்குமிடையிலான T20 போட்டியை கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், போட்டியைக் காண 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இப்போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதியானது கொவிட் – 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைககளுக்கு பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை வைத்திய குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்

இதுஇவ்வாறிருக்க, இலங்கை அணியை தசுன் ஷானக்கவும், இலங்கை லெஜண்ட்ஸ் அணியை திலகரட்ன டில்ஷானும் வழிநடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டில்ஷானின் வருகை இன்னும் உறுதி செய்யப்பட்டவில்லை

இலங்கை அணிக்கு அபராதம் : குணதிலக்கவுக்கு எச்சரிக்கை!

எனினும், குறித்த போட்டியை நடத்துவது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இலங்கை கிரிக்கெட் சபைகக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பிறகு உறுதி செய்யப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன

எதுஎவ்வாறாயினும், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை அணி நாடு திரும்பியவுடன் பங்களாதேஷ் அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…