தலைவர் பதவியிலிருந்து விலகியதன் பின்னணி என்ன?: மனந்திறந்த டோனி

521
mykhel

இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரையில் மறக்கமுடியாத தலைவர்களில் ஒருவராக வலம் வந்த மகேந்திரசிங் டோனி. 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இவர், 2016ம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான அணியின் தலைமைப் பதவியிலிருந்தும் திடீரென விலகியிருந்தார்.

“உலகின் மிக மோசமான DRS கணிப்பாளர் கோஹ்லி” : மைக்கல் வோர்கன்

சர்வதேச கிரிக்கெட்டில் நடுவர் முடிவு மீளாய்வு…

சர்வேதேச கிரிக்கெட்டில் தலைச்சிறந்த அணித் தலைவராக விளங்கிய இவர், திடீரென தலைமைப் பதவியில் இருந்து விலகியதற்கு பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு காரணங்களை முன்வைத்து வந்தனர். ஒருபக்கம் கிரிக்கெட்டில் ஏற்படும் அரசியல் காரணங்கள், கோஹ்லியின் தலைமைத்துவ அழுத்தம் மற்றும் டோனியின் துடுப்பாட்டத்தில் வந்த சறுக்கல்கள் என காரணங்கள் அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

ஒருவேளை, இந்தக் காரணங்கள் அனைத்தும் உண்மையாக இருக்கும் என்ற அளவிற்கு டோனியும் தொடர்ந்தும் அமைதிக்காத்து வந்தார். தலைமைப் பதவியிலிருந்து விலகியமைக்கு, எவ்வித சரியான காரணங்களையும் டோனி முன்வைத்திருக்கவுமில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில், சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் டோனி, தான் தலைவர் பதவியிலிருந்து விலகியதற்கான காரணத்தை தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஆசிய கிண்ணத்துக்கு புறப்படுவதற்கு முன்னர் அவரது சொந்த நகரமான ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் கலந்துக்கொண்ட டோனி, 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தை கவனத்திற் கொண்டுதான் தலைவர் பதவியிலிருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த மகேந்திரசிங் டோனி,

“இந்திய அணியின் 2019ம் ஆண்டு உலகக் கிண்ண எதிர்பார்ப்புக்காகவே தலைமை பதவியிலிருந்து விலகினேன். அதாவது, உலகக் கிண்ணம் ஆரம்பிக்கவிருக்கும் சிறிய இடைவெளியில் புதிய தலைவர் ஒருவரை நியமித்து அவரிடம் அணியின் பொறுப்பை கொடுக்கலாம். ஆனால், அவர் திட்டமிடுவதிலும், அணியைத் தெரிவுசெய்வதிலும் தடுமாற்றத்தை எதிர்கொள்ள நேரிடும். ஆனால், தற்போது அணித் தலைவருக்கு நீண்ட நேரம் கிடைத்துள்ளது. அவரால் சரியானதை தெரிவுசெய்ய முடியும். எனவே, நான் ஓய்வை அறிவித்த நேரம் சரியான தருணம் என்று உணர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றிகள் – ஒரு மீள்பார்வை

ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு …

இந்திய அணியின் தலைவராக செயற்பட்ட மகேந்திரசிங் டோனி, 2007ம் ஆண்டு ஐசிசி T-20 உலகக் கிண்ணம், 2011ம் ஆண்டு ஐசிசி உலகக் கிண்ணம் (50 ஓவர்கள்), 2013ம் ஆண்டு ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் என்ற முக்கிய கிண்ணங்களை வென்றுக்கொடுத்ததுடன் 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். இதன் பின்னர் இந்திய கிரிக்கெட்டின் சகலவிதமான போட்டிகளின் தலைவராகவும் விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், தற்போது ஆசிய கிண்ணத் தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்றுள்ள இந்திய அணியில் தலைவர் விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அணித் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…