இலங்கை தொடருக்கான நியூசிலாந்து T20i குழாம் அறிவிப்பு

Sri Lanka vs New Zealand 2023

151

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட  T20i தொடருக்கான நியூசிலாந்து அணியின் தலைவராக டொம் லேத்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னணி வீரர்கள் IPL தொடரில் பங்கேற்கவுள்ள காரணத்தால் அனுபவம் குறைந்த வீரர்களுடன் இலங்கை அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்ள தயாராகியிருக்கிறது.

T20 அரங்கினை அதிர வைத்த தென்னாபிரிக்க – மேற்கிந்திய தீவுகள் மோதல்

அதன் காரணமாக அனுபவ துடுப்பாட்ட வீரரான டொம் லேத்தம் அணியின் தலைவராக செயற்படவுள்ளதுடன், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகியுள்ள சாட் போவ்ஸ் மற்றும் ஹென்ரி சிப்லி ஆகியோர் T20i குழாத்திலும் இடம்பிடித்துள்ளனர்.

T20i தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள 13 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து குழாத்தில் டிம் செய்பர்ட் அணிக்கு திரும்பியுள்ளார். இவர் 2021ஆம் ஆண்டுக்கு பின்னர் நியூசிலாந்து குழாத்தில் இடம்பிடித்துள்ளார். இவருடன் கோல் மெக்கன்சியும் அணியில் பெயரிடப்பட்டுள்ளார்.

அதேநேரம், அனுபவ வீரர்களான டெரைல் மிச்சல், ஜிம்மி நீசம், மார்க் செப்மன், இஸ் சோதி மற்றும் மெட் ஹென்ரி ஆகியோரும் இலங்கை அணிக்கு எதிரான T20i தொடருக்கான குழாத்தில் தங்களுடைய இடங்களை தக்கவைத்துள்ளனர்.

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், T20i தொடர் ஏப்ரல் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து குழாம்

டொம் லேத்தம் (தலைவர்), சாட் போவ்ஸ், மார்க் செப்மன், மெட் ஹென்ரி, பென் லிஸ்டர், அடம் மில்ன், டார்லி மிச்சல், ஜிம்மி நீசம், ரச்சின் ரவீந்திர, டிம் செய்பர்ட், ஹென்ரி சிப்லி, இஸ் சோதி வில் யங்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<