Home Tamil T20 உலகக் கிண்ணத்தில் வெற்றிக் கணக்கை ஆரம்பித்த இந்தியா

T20 உலகக் கிண்ணத்தில் வெற்றிக் கணக்கை ஆரம்பித்த இந்தியா

ICC T20 World Cup – 2021

93

T20 உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான சுபர் 12 லீக் போட்டியில் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இதன்மூலம் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை இந்திய அணி பதிவுசெய்தது.

T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (03) இரவு நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா – கேஎல் ராகுல் ஜோடி அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைச்சதம் அடித்து அசத்தினர். மேலும் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 140 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர்.

>> ஸ்கொட்லாந்திடம் போராடி வென்ற நியூசிலாந்து அணி

எனினும், ரோஹித் சர்மா 74 ஓட்டங்களுடனும், கேஎல் ராகுல் 69 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பாண்ட் – ஹர்திக் பாண்டியான ஆகிய இருவரும் அதிரடியாக ஓட்டங்களைக் குவிக்க இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றுக்கெண்டது.

இந்திய அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 35 ஓட்டங்களையும், ரிஷப் பாண்ட் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் கரீம் ஜனத் மற்றும் குல்பதீன் நைப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதையடுத்து 211 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

>> இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட்

எனினும், அந்த அணியின் முன்வரிசை வீரர்களான ஹஸ்ரதுல்லாஹ் ஷஸாய், மொஹமட் ஷசாத், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

தொடர்ந்து வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுக்க, ஆப்கானிஸ்தான் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கரீம் ஜனத் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும், அணித்தலைவர் மொஹமட் நபி 35 ஓட்;டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

>> இந்திய அணி இரண்டாக பிளவுபட்டுள்ளது – சொஹைப் அக்தர்

எனவே, இந்திய அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, நடப்பு டி-.20 உலகக் கிண்ணத் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில இருந்து 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதனால் நான்காவது இடத்தில் இருந்த நமீபியா அணி ஐந்தாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடைசி இடத்தில் ஸ்கொட்லாந்து அணி உள்ளது.

இதேவேளை, இந்திய அணி, தமது அடுத்த போட்டியில் ஸ்கொட்லாந்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் (05), ஆப்கானிஸ்தான் அணி, தமது கடைசிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் (07) சந்திக்கவுள்ளது.

போட்டியின் சுருக்கம்


Result


Afghanistan
144/7 (20)

India
210/2 (20)

Batsmen R B 4s 6s SR
KL Rahul b Gulbadin Naib 69 48 6 2 143.75
Rohit Sharma c Mohammad Shahzad b Karim Janat 74 47 8 3 157.45
Rishabh Pant not out 27 13 1 3 207.69
Hardik Pandya not out 35 13 4 2 269.23


Extras 5 (b 2 , lb 1 , nb 1, w 1, pen 0)
Total 210/2 (20 Overs, RR: 10.5)
Fall of Wickets 1-140 (14.4) KL Rahul,

Bowling O M R W Econ
Mohammad Nabi 1 0 7 0 7.00
Sharafuddin Ashraf 2 0 25 0 12.50
Naveen ul Haq 4 0 59 0 14.75
Hamid Hassan 4 0 34 0 8.50
Gulbadin Naib 4 0 39 1 9.75
Rashid Khan 4 0 36 0 9.00
Karim Janat 1 0 7 1 7.00


Batsmen R B 4s 6s SR
Hazratullah Zazai c Shardul Thakur b Jasprit Bumrah 13 15 1 1 86.67
Mohammad Shahzad c Ravichandran Ashwin b Mohammed Shami 0 4 0 0 0.00
Rahmanullah Gurbaz c Hardik Pandya b Ravindra Jadedja 19 10 1 2 190.00
Gulbadin Naib lbw b Ravichandran Ashwin 18 18 3 0 100.00
Najibullah Zadran b Ravichandran Ashwin 11 13 0 1 84.62
Mohammad Nabi c Ravindra Jadeja b Mohammed Shami 35 32 2 1 109.38
Karim Janat not out 42 22 3 2 190.91
Rashid Khan c Hardik Pandya b Mohammed Shami 0 1 0 0 0.00
Sharafuddin Ashraf not out 2 3 0 0 66.67


Extras 4 (b 0 , lb 0 , nb 0, w 4, pen 0)
Total 144/7 (20 Overs, RR: 7.2)
Fall of Wickets 1-13 (2.6) Mohammad Shahzad, 2-13 (3.1) Hazratullah Zazai, 3-48 (6.5) Rahmanullah Gurbaz, 4-59 (9.3) Gulbadin Naib, 5-69 (11.5) Najibullah Zadran, 6-126 (18.1) Mohammad Nabi, 7-127 (18.3) Rashid Khan,

Bowling O M R W Econ
Mohammed Shami 4 0 32 3 8.00
Jasprit Bumrah 4 0 25 1 6.25
Hardik Pandya 2 0 23 0 11.50
Ravindra Jadedja 3 0 19 1 6.33
Ravichandran Ashwin 4 0 14 2 3.50
Shardul Thakur 3 0 31 0 10.33



>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<