இங்கிலாந்தின் T20 உலகக் கிண்ண குழாத்திலிருந்து செம் கரன் நீக்கம்!

ICC Men's T20 World Cup 2021

230

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் செம் கரன், ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செம் கரன் இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்படுவதாக, இங்கிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக தொடர்ந்தும் ஆடவுள்ள வனிந்து ஹஸரங்க

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக செம் கரன் விளையாடி வருகின்றார். இந்த நிலையில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வைத்து இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதாக செம் கரன் சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் அறிவித்துள்ளார்.

இதன் பின்னர் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், செம் கரனின் உபாதை உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, இவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும், அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் வைத்திய அதிகாரிகள், ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், உபாதை தொடர்பிலான மேலதிதக விடயங்கள் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செம் கரன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய சகோதரர் டொம் கரன் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக வீரராக சர்ரே கிரிக்கெட் கழகத்தின் வேகப்பந்துவீச்சாளர் ரீஸ் டொப்லே அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்து கிரிக்கெட் சபை செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அணி உலகக் கிண்ண தயார்படுத்தலுக்காக ஓமானுக்கு புறப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு புறப்படுவதற்கு முன்னர், எதிர்வரும் 16ஆம் திகதிவரை, ஓமான் தலைநகர் மஸ்கட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<