டெஸ்ட் அரங்கில் 73 வருட சாதனையை தகர்த்த ஸ்டீவ் ஸ்மித்

39
 

பாகிஸ்தான் அணியுடன் தற்சமயம் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் அரங்கில் 73 வருடகால சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். 

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் டி20 சர்வதேச மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் ஆகிய இரு தொடர்களில் விளையாடி வருகிறது. 

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகும் ஹசன் அலி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹசன் …

டி20 சர்வதேச தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது அடிலெய்ட்டில் நடைபெற்று வருகிறது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 589 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதில் நான்காமிலக்கத்தில் துடுப்பெடுத்தாடிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 36 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். 

குறித்த இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் 23 ஓட்டங்களை பெற்ற போது புதிய மைக்கல்லை எட்டினார். டெஸ்ட் அரங்கில் ஸ்டீவ் ஸ்மித் 7,000 ஓட்டங்களை கடந்தார். குறித்த 7,000 ஓட்டங்களையும் தனது 126 இன்னிங்ஸில் கடந்தார். 

ஸ்டீவ் ஸ்மித் இவ்வாறு 126 இன்னிங்ஸ்களில் 7,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்ததன் மூலம் டெஸ்ட் அரங்கில் குறைந்த இன்னிங்சுகளில் 7,000 ஓட்டங்களை கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். மேலும் குறித்த சாதனை 73 வருடங்களின் பின்னர் முறியடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

அத்துடன், இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட …

இதற்கு முன்னர் 1946 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி வீரர் வொலி ஹம்மெண்ட் 80 போட்டிகளில் 131 இன்னிங்சுகளில் 7,000 ஓட்டங்களை கடந்திருந்தார். தற்போது 5 இன்னிங்சுகள் இடைவெளி உள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித் 73 வருட சாதனையை தகர்த்துள்ளார். குறித்த பட்டியலில் 138 இன்னிங்சுகளில் கடந்த இலங்கையின் குமார் சங்கக்கார ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றார். 

டெஸ்ட் அரங்கில் விரைவாக 7,000 ஓட்டங்களை கடந்த வீரர்கள் வரிசை.

  1. ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா) 2019 – 126 இன்னிங்ஸ்
  2. வொலி ஹம்மெண்ட் (இங்கிலாந்து) 1946 – 131 இன்னிங்ஸ்
  3. விரேந்திர ஷெவாக் (இந்தியா) 2010 – 134 இன்னிங்ஸ்
  4. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) 2001 – 136 இன்னிங்ஸ்
  5. சேர் கெரி சொபேர்ஸ் (மேற்கிந்திய தீவுகள்) 1971 – 138 இன்னிங்ஸ்
  6. குமார் சங்கக்கார (இலங்கை) 2000 – 138 இன்னிங்ஸ்
  7. விராட் கோஹ்லி (இந்தியா) 2011 – 138 இன்னிங்ஸ் 

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…