பல்லேகலையில் நடைபெறவுள்ள லங்கா T10 சுப்பர் லீக்!

Lanka T10 Super League 2024

60
Lanka T10 Super League 2024

இலங்கையில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா T10 சுப்பர் லீக் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தொடரின் அனைத்து போட்டிகளும் டிசம்பர் 12ம் திகதி முதல் 22ம் திகதிவரை பல்லேகலை மைதானத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

>>நியூசிலாந்து தொடருக்கான இலங்கை T20i ஒரு நாள் குழாம்கள் அறிவிப்பு

முதன்முறையாக நடைபெறவுள்ள இந்த முதன்முறையாக நடைபெறவுள்ள இந்த T10 தொடரில் இலங்கையின் முன்னணி வீரர்கள் மற்றும் சர்வதேசத்தின் முன்னணி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தொடரில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ், கோல் மார்வல்ஸ், ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ், ஜப்னா டைட்டன்ஸ், கண்டி போல்ட்ஸ் மற்றும் நிகம்போ பிரேவ்ஸ் ஆகியே ஆறு அணிகள் மோதவுள்ளன.

குறித்த இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் தலா 17 வீரர்களை ஒப்பந்தம் செய்யமுடியும். குறைந்தது 15 வீரர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதுடன், இதில் 7 வெளிநாட்டு வீரர்களையும் இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<