லஹிரு குமாரவுக்கு தண்டனை வழங்கிய ஐசிசி

1786

நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டொம் லேத்தமினை அருவருக்கத்தக்க வகையில் பேசிய குற்றச்சாட்டுக்காக, இலங்கை அணி வீரர் லஹிரு குமாரவுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) 15 சதவீத அபராதம் மற்றும் ஒரு குறைப்பாட்டு புள்ளியை வழங்கியுள்ளது.

அசத்தல் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் மெதிவ்ஸ், மெண்டிஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது …

இலங்கைநியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின், நான்காவது நாள் ஆட்டம் இன்று (18) நிறைவுக்கு வந்தது. மூன்றாவது நாளான நேற்று துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 578 ஓட்டங்களை குவித்திருந்தது. இதில் முக்கியமாக டொம் லேத்தம், இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு இரட்டைச் சதம் கடந்து 264* ஓட்டங்களை குவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் லஹிரு குமார, அணியின் 96வது ஓவரை வீசிய போது, டொம் லேத்தமின் துடுப்பாட்ட மட்டையில் எட்ஜ் (Edge) முறையில் பட்ட பந்து, பௌண்டரி எல்லைக்குள் நுழைந்தது. இதன்போது லஹிரு குமார, டொம் லேத்தினை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை ஆடுகளத்தில் இருந்த நடுவர்கள் அவதானித்ததுடன், விக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள ஒலி வாங்கியிலும் (MIC) குறித்த வார்த்தைகள் பதிவாகியுள்ளன.

போட்டியின் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் போட்டி மத்தியஸ்தரிடம், ஆடுகள நடுவர்கள் முறையிட்டுள்ளனர். பின்னர், இது தொடர்பில் போட்டி மத்தியஸ்தர் ரிச்சி ரிச்சட்சன் விசாரணையை மேற்கொண்டுள்ளார். குறித்த விசாரணையின் போது, லஹிரு குமார தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் ஐசிசியின் 2.3 சரத்தின்சர்வதேச போட்டியில் கேட்கக்கூடிய வகையில் அருவருக்கக் கூடிய வார்த்தைகளை பேசியமைகாரணமாக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் போட்டிக் கட்டணத்தில் 15 சதவீத அபராதம் மற்றும் வீரருக்கான ஒரு குறைப்பாட்டு புள்ளியை ஐசிசி தண்டனையாக வழங்கியுள்ளது. ஐசிசியின் புதிய சட்டத் திருத்தத்தின் படி, இந்த குற்றத்துக்காக அதிகபட்ச தண்டனையாக போட்டிக் கட்டணத்தில் 50 சதவீத அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு குற்றப்புள்ளிகளை வழங்க முடியும்.

இலங்கை கிரிக்கெட் தேர்தலில் அர்ஜுன களமிறங்க திலங்க விலகல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்…

இதேவேளை, லஹிரு குமார அவரது குற்றத்தினை ஒப்புக்கொண்டதால், அவருக்கான மேலதிக விசாரணைகள் அவசிம் இல்லை என போட்டி மத்தியஸ்தர் ரிச்சி ரிச்சட்சன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.