ICC யின் தகுதியிழப்பு புள்ளி மற்றும் எச்சரிக்கையைப் பெற்ற கோஹ்லி

59

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது ஒழுக்கயீனமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒரு தகுதியிழப்பு புள்ளியை வழங்கி, எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இருதரப்பு தொடரின் முதல் தொடரான டி20 சர்வதேச தொடர் நேற்று முன்தினம் (22) நிறைவுக்குவந்தது. தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவு செய்தது.

டி கொக்கின் அதிரடியால் டி-20 தொடரை சமன் செய்தது தென்னாபிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 3ஆவதும், இறுதியுமான டி-20 ……..

பெங்களூரில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற இறுதி டி20 சர்வதேச போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன் போது இந்திய அணியின் இன்னிங்ஸில் 5ஆவது ஓவரை தென்னாபிரிக்காவின் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் வீசினார்.

குறித்த வேளையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி துடுப்பெடுத்தாடினார். ஆரம்பத்திலேயே பியூரன் ஹென்ட்ரிக்ஸ் ரோஹிட் சர்மாவின் விக்கெட்டை கைப்பற்றியதுடன் பந்துவீச்சில் இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடியை வழங்கினார்

இதனால் ஆத்திரமடைந்த விராட் கோஹ்லி குறித்த ஓவரில் ஓட்டமொன்றை பெற ஓடுகின்ற போது ஆடுகளத்தின் மத்தியில் வைத்து பந்துவீச்சாளர் பியூரன் ஹென்ட்ரிக்ஸின் தோள்பட்டையில் இடித்துச்சென்றார். ஆனால், குறித்த நேரத்தில் பந்துவீச்சாளர் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் எந்தவிதமான பிரச்சினைக்கும் செல்லவில்லை.

இந்நிலையில் போட்டி முடிவடைந்ததன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது விராட் கோஹ்லியின் நடத்தை குறித்து அவதானம் செலுத்தியது. போட்டியின் கள நடுவர்களான நிதின் மேனன் மற்றும் சி.கே நந்தன், மூன்றாம் நடுவர் அணில் சௌத்திரி, நான்காம் நடுவர் சம்சுடீன் ஆகியோரினால் போட்டியின் மத்தியஸ்தரான ரிச்சி ரிச்சர்ட்சனிடம் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

டி20 சர்வதேச அரங்கில் உலக சாதனை படைத்த டேவிட் மில்லர்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் ……..

அதன் பிரகாரம் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய இலக்கம் 2.12 சரத்தில் குறிப்பிடப்படும்போட்டியின் போது சக வீரர்களுடன் அல்லது நடுவர்களுடன் தேவையில்லாமல் உடல் ரீதியாக தாக்குதல்என்ற குற்றச்சாட்டில் குறைந்தபட்ச தண்டனையாக ஒரு தகுதியிழப்பு புள்ளியை வழங்கியுள்ளது. மேலும், அவருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  

கடந்த 2016ஆம் ஆண்டு குறித்த சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து தற்போது விராட் கோஹ்லி மூன்றாவது முறை இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். 2018ஆம் ஆண்டு ஜனவரியில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியிலும், 2019 உலகக் கிண்ண தொடரின் போது ஆப்கானிஸ்தான் அணியுடனும், தற்போது மீண்டும் தென்னாபிரிக்க அணியுடனும் இவ்வாறு தகுதி இழப்பீட்டு புள்ளியை பெற்றுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டை விராட் கோஹ்லி ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் எதற்கும் செல்லவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மேலும், ஒரு வீரர் 24 மாதங்களுக்குள் (2 வருடங்கள்) நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி இழப்பீட்டு புள்ளிகளை பெறும் பட்சத்தில் போட்டி தடைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் .சி.சி தெளிவுபடுத்தியுள்ளது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<