டி20 சர்வதேச அரங்கில் உலக சாதனை படைத்த டேவிட் மில்லர்

75

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான டி20 சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட வீரரான டேவிட் மில்லர் களத்தடுப்பில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய தொடர்களில் ஆடுகிறது. சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டி20 சர்வதேச தொடர் நேற்றுடன் (22) நிறைவுக்கு வந்தது. 

டி கொக்கின் அதிரடியால் டி-20 தொடரை சமன் செய்தது தென்னாபிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 3ஆவதும்….

முதல் போட்டி மழையினால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று (22) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமன் செய்துள்ளது.  

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது, தென்னாபிரிக்க அணியினால் வீழ்த்தப்பட்ட 9 விக்கெட்டுக்களில் 6 விக்கெட்டுக்கள் பிடியெடுப்பு மூலம் வீழ்த்தப்பட்டன. 

இதில் தென்னாபிரிக்க அணியின் சிறந்த களத்தடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டேவிட் மில்லர் ஒரு பிடியெடுப்பை நிகழ்த்தியிருந்தார். இறுதி ஓவரின் 5ஆவது பந்துவீச்சில் ஹார்டிக் பாண்டியாலோங் ஓன்திசையில் ஓங்கி அடித்த பந்தை அத்திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த டேவிட் மில்லர் கைப்பற்றினார்

இதன்மூலம், டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டேவிட் மில்லர் தனது 50ஆவது பிடியெடுப்பை பதிவு செய்தார். இவ்வாறு 50 பிடியெடுப்புக்களை நிகழ்த்திய டேவிட் மில்லர் டி20 சர்வதேச அரங்கில் அதிக பிடியெடுப்புக்களை நிகழ்த்திய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

10 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் வரவுள்ள ஐ.சி.சி நடுவர்கள்

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான்…..

இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் சுகைப் மலிக் 50 பிடியெடுப்புக்களுடன் முதலிடத்தில் காணப்பட்டார். சுகைப் மலிக் 111 போட்டிகளில் 50 பிடியெடுப்புக்களை நிகழ்த்தினார். ஆனால் டேவிட் மில்லர் 72 போட்டிகளில் விளையாடி 50 பிடியெடுப்புக்களை நிகழ்த்தியதன் மூலம் இவ்வாறு முதலிடம் நுழைந்துள்ளார்

கடந்த 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணியில் டி20 சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான 30 வயதுடைய டேவிட் மில்லர் 72 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1,309 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 50 பிடியெடுப்புக்களுடன், ஒரு விக்கெட் காப்பாளராகவும் செயற்பட்டிருந்த மில்லர் ஒரு ஸ்டம்பிங்கையும் நிகழ்த்தியுள்ளார்

டி20 சர்வதேச அரங்கில் அதிக பிடியெடுப்புக்களை நிகழ்த்திய வீரர்கள்

  1. டேவிட் மில்லர் (தென்னாபிரிக்கா) 72 போட்டிகள் – 50 பிடியெடுப்புக்கள்
  2. சுகைப் மலிக் (பாகிஸ்தான், .சி.சி) 111 போட்டிகள் – 50 பிடியெடுப்புக்கள்
  3. ஏபி டி. வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா) 78 போட்டிகள் – 44 பிடியெடுப்புக்கள்
  4. ரொஸ் டைலர் (நியூசிலாந்து) 90 போட்டிகள் – 44 பிடியெடுப்புக்கள் 
  5. சுரேஸ் ரெய்னா (இந்தியா) 78 போட்டிகள் – 42 பிடியெடுப்புக்கள்.

குறித்த பட்டியலில் இலங்கை அணி வீரர்கள் வரிசையில் திஸர பெரேரா முன்னிலையில் காணப்படுகின்றார். இலங்கை, .சி.சி மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்காக 79 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 30 பிடியெடுப்புக்களை நிகழ்த்தி 18ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<