தென்னாபிரிக்காவில் இருந்து நாடு திரும்பும் விராட் கோலி

499
Kohli leaves SA due to family emergency

தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் உள்வாங்கப்பட்ட  இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி தென்னாபிரிக்காவில் இருந்து நாடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

>> இந்திய தொடருடன் ஓய்வுபெறும் தென்னாபிரிக்க வீரர்!

தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கே  நடைபெற்று முடிந்த T20 மற்றும் ஒருநாள் தொடர்களை அடுத்து இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது 

இந்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) சென்சூரியனில் ஆரம்பமாகவிருக்கும் நிலையிலையே விராட் கோலி நாடு திரும்பியிருக்கின்றார். விராட் கோலி தனது குடும்ப விடயம் ஒன்றுக்காக நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் விராட் கோலி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆரம்பமாக முன்னர் இந்திய அணியுடன் இணைவார் எனக் குறிப்பிட்டுள்ளது 

இதேநேரம் முன்வரிசை துடுப்பாட்டவீரரான ருதுராஜ் கய்க்வாட் விரல் உபாதை காரணமாக தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து விலகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது 

கய்க்வாட் இல்லாத நிலையில் அவரின் இடத்தினை அபிமன்யூ ஈஸ்வரன் அல்லது சர்பராஸ் கான் பிரதியீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<