நீயூசிலாந்து டெஸ்ட் குழாத்தில் மீண்டும் கேன் வில்லியம்சன்

West Indies tour of New Zealand 2025

26

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் நியூசிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட நட்சத்திரம் கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளார். 

கேன் வில்லியம்சன் நடைபெற்றுமுடிந்த சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார். இவர் இறுதியாக கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. 

பாகிஸ்தான் தொடரில் இலங்கை அணிக்கு அடுத்த தோல்வி 

எனினும் தற்போது டொம் லேத்தம் தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் குழாத்தில் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளார். இவருடன் வேகப்பந்துவீச்சாளர்களான ஷக்காரி போல்க்ஸ், ஜேகப் டஃப்பி மற்றும் பிளைர் டிக்னர் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களும் 14 பேர்கொண்ட குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். 

அதேநேரம் சிறிய உபாதை ஒன்றுக்கு முகங்கொடுத்திருந்த டெரைல் மிச்சல், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்டுள்ளார். 

எனினும் உபாதையிலிருந்து குணமடைந்துவரும் கிளென் பிலிப்ஸ் மற்றும் கெயல் ஜெமிஸன் ஆகியோர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இணைக்கப்படவில்லை. 

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நியூசிலாந்து குழாம் 

டொம் லேத்தம் (தலைவர்), டொம் பிளெண்டல், மைக்கல் பிரேஸ்வல், டொவோன் கொன்வே, ஷெக் போல்க்ஸ், ஜேகப் டஃப்பி, மெட் ஹென்ரி, டெரைல் மிச்சல், ரச்சின் ரவீந்ரா, மிச்சல் செண்ட்னர், நேதன் ஸ்மித், பிளைர் டிக்னர், கேன் வில்லியம்சன், வில் யங் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<