மே.தீவுகள் தொடருக்கான அவுஸ்திரேலியா குழாம் அறிவிப்பு!

West Indies tour of Australia 2022

89

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான அவுஸ்திரேலியா குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர்கொண்ட குழாத்துக்குள் இந்திய அணிக்கு எதிரான தொடரிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டிருந்த டேவிட் வோர்னர் அணிக்கு திரும்பியுள்ளார்.

தோல்வியுறாத அணியாக இலங்கை லெஜன்ட்ஸ்

டேவிட் வோர்னருடன் உபாதைகளுக்கு முகங்கொடுத்திருந்த மார்கஸ் ஸ்டொயிஸ், மிச்சல் மார்ஷ் மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோரும் அணிக்குள் மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் உபாதைகள் காரணமாக இந்தியாவிலிருந்து நாடு திரும்பியிருந்த அஷ்டன் ஆகர் மற்றும் கேன் ரிச்சட்சன் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உலகக்கிண்ண குழாத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், அடுத்துவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உலகக்கிண்ண குழாத்தில் இடம்பெறாவிட்டாலும், இந்திய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு அரைச்சதங்களை விளாசிய கெமருன் கிரீனுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடர் எதிர்வரும் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா குழாம்

ஆரோன் பின்ச் (தலைவர்), சீன் அபோட், பெட் கம்மின்ஸ், டிம் டேவிட், கெமரூன் கிரீன், ஜொஷ் ஹேஷல்வூட், ஜொஷ் இங்கிலிஸ், மிச்சல் மார்ஷ், கிளேன் மெக்ஸ்வெல், டேனியல் சேம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெதிவ் வேட், டேவிட் வோர்னர், அடம் ஷாம்பா

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<