பென் ஸ்டோக்ஸால் வாய்ப்பை இழந்தமை தொடர்பில் கூறும் ஹெரி புரூக்!

Cricket World Cup 2023

47

உலகக்கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்து குழாத்தில் இடம்பெற முடியாமை தொடர்பில் இளம் துடுப்பாட்ட வீரர் ஹெரி புரூக் கருத்து வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் சபை இந்தியாவில் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடருக்கான முதற்கட்ட குழாத்தை அறிவித்திருந்தது.

மீண்டும் தேசிய அணிக்கு திரும்புவது தொடர்பில் குசல் பெரேரா!

அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து குழாத்திலிருந்து ஹெரி புரூக் வெளியேற்றப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றிருந்த பென் ஸ்டோக்ஸின் இடத்தில் ஹெரி புரூக் விளையாடியிருந்தார்.

எனினும் பென் ஸ்டோக்ஸ் ஓய்விலிருந்த திரும்பி மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாட தீர்மானித்ததன் காரணமாக, புரூக் உலகக்கிண்ணத்துக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டு, பென் ஸ்டோக்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

அணியிலிருந்து தான் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் ஹெரி புரூக் கருத்து வெளியிடுகையில், “நிச்சயமாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் ஏமாற்றமடைகிறேன். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாது. இதனை கடந்து செல்ல வேண்டும். அதனை முலும் சிந்திக்கமால் இருக்க முயற்சிக்கிறேன்” என்றார்.

இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட இவர், “நான் இந்த விடயம் தொடர்பில் மெதிவ் மொட் மற்றும் ஜோஸ் பட்லருடன் கலந்துரையாடினேன். பென் ஸ்டோக்ஸ் அணிக்குள் வருவதால் நான் வெளியேற வேண்டியிருக்கும் என கூறினர். பென் ஸ்டோக்ஸ் ஒரு சிறந்த வீரர். இதனை நான் குற்றமாக கூறமுடியுமா? என கேள்வியெழுப்பினார்.

அதேவேளை இந்த காலப்பகுதியில் தான் சிறப்பாக செயற்பட்டுவரும் போதும், இதனைவிட மேலும் பலப்படுத்திக்கொள்ளவேண்டிய விடயங்கள் உள்ளன என்பதையும் இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<