இலங்கை வீரர்களின் சாதனையை முறியடித்த ஜேசன் ரோய் – பெயர்ஸ்டோ

1844
Getty

தற்சமயம் நடைபெற்றுவரும் 12ஆவது ஐ.சி.சி உலகக் கிண்ண தொடரில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டு புதிய சாதனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 

இத்தொடரில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று (11) பேர்மிங்ஹமில் நடைபெற்றது. குறித்த போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்று உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 27 வருடங்களின் பின்னர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை இறுதிப் போட்டியில் நாளை மறுதினம் (14) சந்திக்கவுள்ளது.  

ஐ.சி.சி. இன் அபராதத்தினை எதிர்கொள்ளும் ஜேசன் ரோய்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேசன் ரோய், போட்டி…

இங்கிலாந்து அணியின் நேற்றைய வெற்றிக்கு பந்துவீச்சு ஒருவகையில் சிறப்பாக இருந்தாலும், பின்னர் பதில் துடுப்பாட்டம் மிக சிறப்பாக அமைந்திருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களினுடைய சிறந்த ஆரம்பமே இங்கிலாந்து அணிக்கு இலகு வெற்றியை பெற்றுக்கொடுத்தது

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஜெசன் ரோய் மற்றும் ஜொனி பெயர்ஸ்டோ ஜோடி முதலாவது விக்கெட்டுக்காக 124 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது. குறித்த 124 ஓட்டங்கள் மூலமாக ஜெசன் ரோய் மற்றும் ஜொனி பெயர்ஸ்டோ ஆகியோர் உலகக் கிண்ண சாதனை ஒன்றை முடியறித்துள்ளனர்

நடப்பு உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜெசன் ரோய் மற்றும் ஜொனி பெயர்ஸ்டோ ஆகியோர் லீக் போட்டிகளின் போது பங்களாதேஷ் அணிக்கெதிராக இணைப்பாட்டமாக 128 ஓட்டங்கள், இந்திய அணிக்கெதிராக 160 ஓட்டங்கள், நியூசிலாந்து அணிக்கெதிராக 123 ஓட்டங்கள் மற்றும் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 124 ஓட்டங்கள் என்றவாறு நான்கு போட்டிகளில் இணைப்பட்ட சதமடித்து இவ்வாறு உலகக் கிண்ண சாதனை ஒன்றை முறியடித்துள்ளனர்.  

உலகக் கிண்ணத்தை உலுக்கிய ஆர்ச்சரின் டுவீட்டுகள்

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும்….

இதற்கு முன்னர் இலங்கை அணி வீரர்களினால் இரண்டு உலகக் கிண்ணங்களிலும், அவுஸ்திரேலிய அணி வீரர்களினால் இரண்டு உலகக் கிண்ணங்களிலும், இந்திய அணி வீரர்களினால் ஒரு உலகக் கிண்ண தொடரிலும் மொத்தமாக ஒரு அணியினால் மூன்று போட்டிகளிலேயே இணைப்பாட்ட சதம் பெறப்பட்டிருந்தன. தற்போது இந்த சாதனையையே 2019 உலகக் கிண்ண தொடரில் 4 தடவைகள் சதமடித்து ஜெசன் ரோய் மற்றும் ஜொனி பெயர்ஸ்டோ ஜோடி முறியடித்திருக்கின்றது

இதில் 1996 ஆம் ஆண்டு இலங்கை அணியின் அரவிந்த டி சில்வா மற்றும் அசங்க குருசிங்க ஜோடி 3 முறை பெற்றிருந்த சத இணைப்பாட்டமே நீண்ட கால சாதனையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்தில் புதிய சாதனை படைத்த ஸ்டாக்

12 ஆவது ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப்….

இதேவேளை நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணியினாலும் ஒரு சாதனை முறியடிக்கப்பட்டிருந்தது. உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டாக் ஜொனி பெயர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் படைத்தார்.  

ஒரு உலகக் கிண்ண தொடரில் அதிக இணைப்பாட்ட சதமடித்த ஜோடிகள் 

ஜெசன் ரோய் மற்றும் ஜொனி பெயர்ஸ்டோ ஜோடி (இங்கிலாந்து) – 4 தடவைகள் (2019)

அரவிந்த டி சில்வா மற்றும் அசங்க குருசிங்க ஜோடி (இலங்கை) – 3 தடவைகள் (1996)

அடம் கில்கிறிஸ்ட் மற்றும் மெத்யூ ஹெய்டன் ஜோடி (அவுஸ்திரேலியா) – 3 தடவைகள் (2007)

குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ன டில்ஷான் ஜோடி (இலங்கை) – 3 தடவைகள் (2015) 

அரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஜோடி (அவுஸ்திரேலியா) – 3 தடவைகள் (2019) 

ரோஹிட் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஜோடி (இந்தியா) – 3 தடவைகள் (2019)  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<